Thursday, 16 November 2017

TNPSC Study Materials - 6th Science notes - Biology 1

TNPSC Study Materials - 6th Science Notes - Biology 1

தாவரங்களின் உலகம் (The World of Plants)

உணவு தாவரங்கள்

          நாம் உணவிற்காக பயன்படுத்தப்படும் நெல், கம்பு, கேழ்வரகு, கோதுமை கரும்பு மற்றும் பலவற்றை நாம் உணவு தாவரங்கள் என குறிப்பிடுகிறோம்

மருத்துவ தாவரங்கள் (Medicinal Plants)

          உணவுக்கு மட்டுமில்லாமல் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படும் தாவரங்கள் மருத்துவ தாவரங்கள் ஆகும். அவைகளை நாம் மூலிகை என குறிப்பிடுகிறோம்

மூலிகையின் பயன்கள்

1. தூதுவளை - சளி, கோழை அகற்றும், மார்புச்சளி நீக்கும், உடல் பலம் தரும்
2. கீழாநெல்லி - மஞ்சள் காமாலை நோயை தீர்க்கும்
3. வேம்பு - கிருமிநாசினி, குளிர்ச்சி தரும், வயிற்று பூச்சிகளை நீக்கும்
4. நெல்லி - வாய் புண் நீக்கும், குளிர்ச்சி தரும்
5. துளசி - சளி, கோழை அகற்றும், காய்ச்சலை நீக்கும்
6. கற்பூரவல்லி - வியர்வை பெருகும், கோழை அகற்றும், காய்ச்சலை நீக்கும்
7. வசம்பு - வயிற்று தொடரான நோய்களை நீக்கும் 
8. மஞ்சள் - கிருமி நாசினி, அழகுபடுதல்
9. பிரண்டை - பசியை தூண்டும், செரிமானமின்மையை நீக்கும்
10. இஞ்சி - செரிமான கோளாறுகளை நீக்கும்
11. மிளகு - தொண்டை கரகாரப்பை நீக்கும்
12. சுக்கு, புதினா, மிளகு - சளி, காய்ச்சல், வயிற்றுவலி
13. கிராம்பு - கிருமி நாசினி


பூக்களும், - வாசனை பொருட்களும்

         ரோஜா, மல்லி, அல்லி போன்றவை பூக்களாகவும், வாசனை பொருட்களாகவும் பயன்படுகின்றன


நறுமண பொருட்கள் (Spices)

          சுக்கு, புதினா, வெந்தியம் போன்றவை நறுமண பொருட்களாகவும் பயன்படுகின்றன. இவைகளில் சில மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகின்றன

எடுத்துக்காட்டு -நறுமண பொருட்கள்

1. விதை - வெந்தியம், சோம்பு, கடுகு
2. தரைகீழ்த்தண்டு - மஞ்சள், சுக்கு/இஞ்சி
3. காய் - ஏலக்காய்
4. பலம் - மிளகு
5. மரப்பட்டை - பட்டை
6. இலை - புதினா
7. பூமொட்டு - கிராம்பு

நார்த்தாவரங்கள் (Fibre Crops)

          பருத்தி, சணல், வாழை தண்டு, அன்னாசி இலை, சோற்றுக்கற்றாழை இலை, தேனமட்டை போன்றவற்றில் இருந்து நார் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே இவைகளை நார் தாவரங்கள் என அழைக்கப்படுகிறது

         * சணல் தாவரத்தில் 85% செல்லுலோஸ் உள்ளதால், இவை உயிரி நெகிழி (Bio-Plastic) தயாரிக்க பயன்படுகிறது. இவை மண்ணில் மக்கும் தன்மை கொண்டது

கட்டுமான தாவரங்கள்

         கட்டுமான தேவைக்கு பயன்படுத்தப்படும் மரங்களை, கட்டுமான தாவரங்கள் என ஏழைகப்படுகிறது. இவைகளில் சில பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

யூக்கலிப்டஸ் - தைலம் மற்றும் காகிதம்
இலவம் - பஞ்சி, தீக்குச்சி, தீப்பெட்டி, சிறு பொம்மை
வில்லோ - விளையாட்டு பொருட்கள், கிரிக்கெட் மட்டை
கருவேலம் - மாட்டுவண்டி பாகங்கள்
மல்பரி - டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள்
பைன் - ரயில் படுக்கைகள், படகுகள்


மற்றவை

1. Spice Garden of India எனன்றழைக்கப்படுவது - கேரளா
2. தமிழகத்தில் அதிக மாம்பழம் விளையும் மாவட்டம் - கிருஷ்ணகிரி
3. ஆப்பிரிக்காவின் மிக அடர்த்தியான மரம் - போபாப் மரம், இவை 47 மீட்டர் அகலம் கொண்டு இருக்கும் 
4. பலமரங்களிலே நீண்டகாலம் பலம் தரும் மரம் - ஆரஞ்சு மரம். இவை 400 வருடங்கள் பலம் தரும்
5. மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம் - ராஃப்லேசியா. இதன் பூ 1 மீட்டர் அகலம் கொண்டு இருக்கும்
6. ஒரு தர்ப்பூசணியில் இருந்து 6,00,000 சேடிகள் பயிரிட்டு 180 டன் தர்ப்பூசணி விளைச்சல் செய்யலாம்




No comments:

Post a Comment