Saturday, 18 November 2017

TNPSC Science, 6th Science Biology Notes - part 2


TNPSC Study Materials - 6th Science Notes Biology Part 2

உணவு முறைகள்

உணவு

          உடலுக்கு ஊட்டத்தை தரும் பொருட்களை உணவு என்கிறோம்

உணவின் ஆதாரங்கள்

          தாவரம் ( வேர், தண்டு, இலை, மலர் காய் போன்றவை) விலங்குகள் (முட்டை, மாமிசம், பால் போன்றவை)

ஊட்டச்சத்துகள் (Nutrients)

        உணவிலுள்ள, உடலுக்கு தேவையான சத்துக்களை ஊட்டச்சத்து என்கிறோம்

ஊட்டச் சத்துகளின் வகைகள்

கார்போஹைட்ரெட்ஸ் (Carbohydrates) - ஆற்றல் அளிக்கின்றன
புரதங்கள் (Proteins) - வளர்ச்சி அளிக்கின்றன
கொழுப்புகள் (Fats) - ஆற்றல் அளிக்கின்றன
வைட்டமின்ஸ் (Vitamins) -உடலியல் செயல்களை ஒழுகுபடுத்துகின்றன
தாது உட்புகள் (Minerals) - உடலியல் செயல்களை ஒழுகுபடுத்துகின்றன
நீர் (water) - உணவை கடத்துகிறது ; உடலின் வெட்பத்தை ஒழுங்குபடுத்துகிறது

ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்கள்

புரதம் குறைபாட்டால் வரும் நோய்கள்

1. குவாஷியோர்கர் (Kwashiorkar) - (1-5 வயது குழந்தைகளை தாக்கும்) ; அறிகுறிகள் - வளர்ச்சி தடைபடுதல், உப்பிய வயிறு, கை மற்றும் கால்கள் வீக்கம் ; 

2. மராஸ்மஸ் (Marasmus) ; நோயின் அறிகுறிகள் - குச்சிபோன்ற கை கால்கள், மெலிந்த தோற்றம், பெரிய தலை, எடை குறைவு, உடல் மற்றும் முலை வளர்ச்சி குறைதல்

நோயை தடுக்க உட்கொள்ள வேண்டிய உணவு பொருட்கள் - மீன், இறைச்சி, பால், முட்டை (வெள்ளை கரு), பட்டாணி, தானியங்கள்

வைட்டமின் குறைபாட்டால் வரும் நோய்கள்



தாது உட்புகள் குறைபாட்டால் வரும் நோய்கள் 



சரிவிகித உணவு (Balanced Diet)

         அணைத்து ஊட்டச்சத்துக்களையும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவே சரிவிகித உணவாகும்

உணவூட்டும்

          உணவு உட்கொள்ளும் முறையே உணவூட்டும் எனப்படுகிறது. இவை உணவை உட்கொள்ளுதல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மையாக்குதல் எனப் பல நிலைகள் கொண்டது

* சூரிய ஒளி, கரியமில வாயு, நீர், பச்சையம் ஆகியவற்றை பயன்படுத்தி தாவரங்கள் ஸ்டார்ச் (சக்கரை) தயாரிப்பது ஒளிசேர்க்கை

உணவூட்டத்தின் வகைகள்

1. தற்சார்பு ஊட்ட முறை

          தனக்கு தேவையான உணவை தானே தயாரித்தல் தற்சார்பு ஊட்ட முறை ஆகும். எ.க - பசுந்தவரங்கள், யூக்ளினா

2. பிற சார்பு ஊட்ட முறை

         உணவுக்காக பிற உயிர் சார்ந்து வாழ்தல் பிற சார்பு ஊட்ட முறை ஆகும். இதன் வகைகள்

         ஒட்டுண்ணி உணவூட்டும் - பிற உயிர்களை பாதிப்புக்குள்ளாகி அவற்றிலிருந்து தமக்கு தேவையான உணவை பெறுவது ஒட்டுண்ணி உணவூட்டும் ஆகும். Eg - கஸ்க்யூட்டா (Cuscuta)
ஒட்டுண்ணி உணவூட்ட வகைகள்

1. அக ஒட்டுண்ணிகள் - இவை மனிதன் அல்லது விலங்குகளின் உடலினுள் வாழக்கூடியவை. eg - உருளைப்புழு

2. புற ஒட்டுண்ணிகள் - பிற உயிரினங்களின் உடலில் வெளிபரப்பில் ஒட்டிக்கொண்டு அவற்றிலிருந்து உணவை உறிஞ்சுகின்றன. eg. பேன், அட்டைப்பூச்சி

3. சாறுண்ணி உணவூட்டும் - இவை இறந்துபோன தாவர, விலங்கு பொருட்களை மக்க செய்து எளிய மூலக்கூறுகளாக மாற்றி, அவற்றை உடல் சுவர் வழியாக உறிஞ்சுவது. eg. காளான்


3. சிறப்பு வகை உணவூட்டும்

          நெப்பந்தஸ், டிரோசீரா, யுட்ரிகுலேரியா போன்ற தாவரங்கள் பசுமையானதாகவும், தற்சார்பு ஊட்டமுறை கொண்டதாகவும் இருக்கின்றன. எனினும் அவை நைட்ரஜன் குறைந்த மண்ணில் வளர்வதால் பூச்சிகளை பிடித்து அவற்றிலிருந்து நைட்ரஜனை பெருக்குகின்றன. எனவே அவை பூச்சி உண்ணும் தாவரங்கள் எனப்படுகின்றன

உணவூட்ட முறையின் அடிப்படையில் விலங்குகள்

1. தாவர உண்ணி - eg. ஆடு, மாடு
2. மாமிச உண்ணி -eg. புலி
3. அணைத்து உண்ணி - eg. காகம்

மற்றவை

1. வேகவைத்த மீன், மற்றும் அஸ்கார்பிக் அமிலம் நிரம்பிய கத்திரிக்காய் போன்றவை உண்ணுதல் இருதய நோய் வராமல் தடுக்கும்
2. BMI (Body Mass Index) உடல் பருமன் குறியீடு = எடை (Kg) / உயரம் (m.sq) ; BMI 20 கீழ் இருந்தால் - உடல் மெலிந்து இருத்தல் ; 20 முதல் 25 வரை இருந்தால் - சரியான எடை; 25-30 அதிக எடை ; 30 க்கு மேல் - உடல் பருமனாக இருத்தல் என்று பொருள்


No comments:

Post a Comment