Tuesday, 21 November 2017

TNPSC History Materials - Indus Valley Civilisation


TNPSC History Study Materials - 6th Social Science - part 2

Indus Valley Civilisation (சிந்துவெளி நாகரிகம்)

          சிந்துவெளி நகரிகள், செப்பு கற்காலத்தை சேர்ந்த நாகரிகம் ஆகும்

ஹரப்பா

           1921 ம் ஆண்டு ரவி நதிக்கரையில், நடைபெற்ற அகழ்வாராச்சியில் புதையுண்ட நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஹரப்பா (சிந்து மொழியில் புதையுண்ட நகரம் - என பொருள்) என அழைக்கப்பெற்றது. இதனை தொடர்ந்து அங்கு கண்டறியப்பட்ட நகரங்கள், ஹரப்பா நாகரிகம் என குறிப்பிடப்பட்டது.

          சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் இந்நாகரிகம் இந்தியாவில் மலர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.

முக்கிய ஹரப்பா நாகரிக நகரங்கள்

ஹரப்பா, மொகஞ்சதாரோ, சான்குதாரோ, லோக்தல், காலிபங்கம்

ஹரப்பா நாகரிகம் சிறப்பு

1. சிந்துவெளி நகரங்களில் கோட்டை பகுதியில் பெருங்குளம் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு இருந்தது.

2. வீடுகள் வரிசையாகவும், ஒழுங்காகவும் நேர்த்தியுடன் கட்டப்பட்டு இருந்தன. நகரம் திட்டமிட்டு அமைக்கப்பட்டு இருந்தது.

3. வடபகுதியில் குறுகியும் (ஆட்சி செய்பர்களும்), கிழக்கு பகுதி பலமாகவும், விரிந்தும் (மக்கள் வாழும் பகுதி) நகரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன

4. பொதுக்கழிவுநீர் திட்டம், பொதுகுளம், பாதாளசாக்கடை அமைக்கப்பட்டு இருந்தன.

5. பயன்பட்டு அறிவியல் (Applied Science) தொழில் நுட்பங்கள் பயன்பாட்டில் இருந்தன

6. கடல்வழி வாணிகம் செய்ததற்கு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றன. விலையுயர்ந்த கற்கள், அணிகலன்கள் மற்றும் பல்வேறு பயன்பட்டு பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன

7. எழுதிப்பணி செய்வோர், மரபொம்மை செய்வோர், பிற கைவினை பொருட்கள், மண்பாண்டம் செய்வோர், வணிகர், நெசவாளர், உலோக வேலை செய்வோர், ஆயுதங்கள் செய்யும் தொழில் என பல தொழில் செய்யப்பட்டன

8. சுடுமண் முத்திரைகள் பயன்படுத்தப்பட்டன. இதில் எழுத்துக்கள், எருது, காளை, வண்டி, புறா, படகுகள், யோகாமுத்திரையில் அமர்ந்து இருக்கும் ஒருவர், போன்ற வடிவம் பொறிக்கப்பட்டு இருந்தன

9. எழுத்துக்கள் பெரிதும் சித்திர எழுத்துக்கள் ஆகும். இவை வடதுபக்கத்தில் இருந்து இடதுபக்கமும், இடதுபக்கம் இருந்து வடதுபக்கமும் எழுதப்பட்டு இருந்தன

10. மக்கள் பருத்தி, கம்பளி ஆடை அணிந்து இருந்தனர்.

11. தங்கம், தந்தம், வெள்ளி, விலையுயர்ந்த அணிகலன்களை மக்கள் அணிந்து இருந்தனர்.

12. டெர்ரகோட்டா (Terracotta) எனப்படும் சுடுமண் பாண்டம் செய்வதில் திறமைமிக்கவர்களாய் இருந்தனர். பறவைகள், ஆண் பெண் உருவங்கள், எருதுகளால் இழுக்கப்படும் வண்டி போன்ற பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

13. மேலும், வெண்கலத்தால் ஆனா நாட்டியம் ஆடும் பெண் சிற்பம், தாடியுடன் காட்சிதரும் ஒருவரின் சுண்ணாம்புக்கல் சிற்ப சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளன

14. ஹரப்பா நாகரிக மக்கள், பசுபதி எனப்படும் சிவன் உருவம், மற்றும் பெண் கடவுளையும் வழிபட்டனர்

15. ஹரப்பா நாகரிகம் அழியப்பெற்றதற்கு சரியான காரணத்தை கூறமுடியவில்லை

16. கோதுமை, பார்லி போன்றவை விளைவிக்கப்பட்டன. மேலும் வேளாண்மைக்கு மர கலப்பை பயன்படுத்தப்பட்டன

மற்றவை

1. இங்கு மண்பாண்டம், பளபளவெனவும், வண்ணம் பூசப்பட்டும் காணப்பட்டன

2. மொகஞ்சதாரோ என்பதன் பொருள் - இடுகாட்டு மேடு



No comments:

Post a Comment