Wednesday, 22 November 2017

TNPSC History Materials - Ancient Tamilnadu

TNPSC History Study Materials - Ancient Tamilnadu

பண்டைத் தமிழகம்

Study Notes - Tamilnadu 6th History part 3

1. சென்னை மாகாணம், 1967 ம் ஆண்டில், தமிழ்நாடு என்று அறிஞர் அண்ணா அவர்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது

2. பாண்டியநாட்டின் தலைகாரண தென்மதுரையில் முதல் தமிழ் சங்கம் நடைபெற்றது . இடை சங்கம் கபாடபுரத்திலும் ; கடை சங்கம் தற்போதுள்ள மதுரை மூதூரில் (கூடல்) நடைபெற்றது.

3. லெமூரியா கண்டம், கன்னியாகுமரிக்கு தென்திசையில் இருந்ததாகவும், அங்கு வளைந்த லெமூரியா எனப்படும் குரங்குகளின் இருந்துதான் மனிதஇனம் தோன்றியதாகவும் கருதப்படுகிறது

4. கடை தமிழ்ச்சங்கம் திமு (திருவள்ளுவர் பிறப்பதற்கு முன்) 300 முதல் திபி 300 வரை நடைபெற்று இருக்கும் என நம்பப்படுகிறது

5. சங்க இலக்கிய நூல்கள் - எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஆகும் (இவற்றில் உள்ள செய்யுள்களை கபிலர், பரணர், ஓளவையார்,நக்கீரர் போன்ற பலநூறு புலவர்கள் இயற்றியுள்ளனர்). இவற்றின் மூலம் தமிழ் மக்களின் நாகரிகம், பழக்கவழக்கம், ஆட்சிமுறை பண்பாடு முதலியனவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்

6. தமிழ்ன் மிக பழமையான இலக்கிய நூல் - தொல்காப்பியம் ஆகும். கடைச்சங்க காலத்திலே திருக்குறள் தோன்றியுள்ளது

7. நமது தாய்மொழி தமிழ் தனி இலக்கண வரம்பு கொண்டு வளர்ந்த தன்மையால் - செந்தமிழ் எனப்படுகிறது

8. சங்கத்தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினார். எகிப்து, ரோம், சீனா போன்ற நாடுகளுடன் வாணிகம் செய்துள்ளனர்

9. தமிழகத்தின் ஐந்து நிலப்பரப்புகள் - குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்; முல்லை - காடுகளும் அது சார்ந்த இடமும்; நெய்தல் - கடலும் கடற்கரை பகுதியும் ; மருதம் - வயல் பகுதிகள் ; பாலை - வறட்சிக்கு உள்ளாகித் திரிந்த நில பகுதிகள்

10. இக்காலத்தில் உழவர் தொழிலை உயர்ந்த தொழிலாக கருதினர்.

11. மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியன்

12. சேரர் :
ஆட்சி பகுதி - தற்போதைய தமிழகமும், வடமேற்கு தமிழகமும்
சேரர் மரபில் வந்தவர் - இமயவர்மன், நெடுஞ்சேரலாதன், சிலம்பு புகழ் சேரன் செங்குட்டுவன்
தலைநகரம் - வஞ்சி (கரூர்)
துறைமுகம் - தொண்டி மற்றும் முசுறி
சின்னம் - விற்கொடி

13. சோழன்:
ஆட்சிப்பகுதி - திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் தென்னாற்காட்டின் சிலப்பகுதிகள்
சோழ மரபில் வந்தவர்கள் - கரிகாற்சோழன், கிள்ளிவளவன், ராஜா ராஜா சோழன், ராஜேந்திர சோழன்
தலைநகரம் - உறையூர்
துறைமுகம் - காவேரி பூம்பட்டினம்
சின்னம் - புலிக்கொடி

14. பாண்டியர்
ஆட்சிப்பகுதி - கன்னியாகுமாரி முதல் மதுரை வரை
பாண்டியர் மரபில் வந்தவர்கள் - நெடுஞ்செழியன்
தலைநகரம் - மதுரை
துறைமுகம் - கொற்கை (தூத்துகுடி)
சின்னம் - மீன்கொடி

15. மற்ற 7 குறுநில மன்னர்கள் (கடையெழு வள்ளல்) - பாரி, ஓரி, ஆய், எழினி, நள்ளி, மலையன், பேகன்

16. மக்கள் வாழக்கை - பிறப்பால் வேறுபாடுகள் இல்லை, புராண குறிப்புகளில் கூறப்பட்டுள்ள திருவிழாக்கள் அறிந்திருக்கவில்லை. பெண்கள் உரிமை உடம் வாழ்ந்தார்கள். திருக்கோவில் கட்டுவதற்கு முன் வீரமரணம் அடைந்தவர்களின் நடுக்களையும், முன்னோர்களையும் வணங்கினார்கள்



No comments:

Post a Comment