Wednesday, 15 November 2017

TNPSC Group 4

TNPSC Group 4 Exam

How to Prepare for TNPSC Group 4 Examinations ???

          இந்த பதிவில், TNPSC குடிமைப்பணி குரூப் 4 தேர்விற்கு தயாராவது எப்படி என்பதனை பற்றி தெளிவாகக்காண்போம் .

இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாற்றங்கள்

          இந்த ஆண்டு முதல், கிராம நிர்வாக அலுவலர் தேர்வும், குடிமைப்பணி குரூப் 4 தேர்வும் ஒரே தேர்வாக இணைக்கப்பட்டுள்ளது.

நேர்மறை :
1. அடிப்படை கிராம நிர்வாகம் பற்றி இனி படிக்க தேவையில்லை
2. cutoff மதிப்பெண் சிறிதளவு குறையும்

எதிர்மறை :
1. இனி ஓராண்ண்டுக்கு ஒரே தேர்வுதான். VAO தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டால் குரூப் 4 தேர்வில் வாங்கிவிடலாம் என நினைத்து ஆறுதல் அடையமுடியாது

சரி, இனி குரூப் 4 தேர்வுக்கு தயாராவது எப்படி என்பதை பற்றிப்பார்ப்போம்

          முதலில், எந்த ஒரு தேர்வுக்கு தயாராவது என்று தீர்மானித்தாலும், அந்த தேர்வின், தேர்வு முறை, பாடத்திட்டம், கேள்வி கேட்கப்படும் முறை, கடந்த ஆண்டு cutoff மதிப்பெண் போன்றவற்றை நன்றாக அலசி ஆராயவேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது நமக்கு அந்த தேர்வில் ஒழிந்து இருக்கும் நுணுக்கங்கள் தெரியவரும். இதனை தெரிந்தால் மட்டுமே ஒருவர் எந்த ஒரு தேர்விலும் வெற்றிபெற முடியும்.

         சில பேர் இந்த சூட்சமத்தை, முதலிலே உணர்ந்து விடுகிறார்கள். எனவே அவர்கள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டில் தேர்வில் தேர்ச்சிபெற்றுவிடுகிறார்கள். மற்றும் சிலர் சில முயற்சிகளுக்கு பின் தானாக அறிந்துகொள்கிறார்கள், இவர்கள் சிறிது தாமதமாக வெற்றி பெறுகிறார்கள். மற்றும் சிலர் இதனை உணராமல், இந்த தேர்வில் இறுதி வரை வெற்றி பெறாமல் போய்விடுகிறார்கள்.

         சிலர் தானாக இவை அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்கள். மற்றும் சிலர்க்கு சிலரது வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.

        இங்கு, நாங்கள் இரண்டாவதாக உள்ள நபருக்கு வழிகாட்டவே இப்பதிவினை பதிவிட்டுள்ளோம்.

தேர்வு முறை (Scheme of the Examinations)

         தேர்வுமுறையைபற்றி தெரிந்தால் மட்டுமே, ஒருவர் அந்த தேர்வை எழுத முயற்சிப்பது நன்று. இங்கு இத்தேர்வில்

No
Subjects
Questions
1
General Studies
75
2
Aptitude
25
3
General Tamil / General English
100
Total
200
Total marks – 200 * 1.5 = 300 marks

பாடத்திட்டங்கள் (Syllabus )

I. General Studies (பொது அறிவு)

1. தற்போதைய நாட்டுநடப்பு நிகழ்வுகள்
2. இந்திய வரலாறு மற்றும் சுதந்திர போராட்டம்
3. புவியியல்
4. பொருளாதாரம், சமூகம், அரசு திட்டங்கள்
5. அரசியலமைப்பு மற்றும் ஆட்சிமுறை
6. அறிவியல்
7. Aptitude Test (திறனறிவு தேர்வு)

II. பொதுத்தமிழ் / பொது ஆங்கிலம்

For Detailed Syllabus - Click Here

Cutoff மதிப்பெண் / கடந்தாண்டு Cutoff மதிப்பெண்

          ஒருவர், கடந்த ஆண்டு Cutoff மதிப்பெண்ணையே, தோராயமான இலக்காக கொண்டு, அந்த மதிப்பெனிற்கு மேல் பெற முயற்சிசெய்ய வேண்டும். இவ்வாறு முயற்சி செய்தால் தேர்வில் எளிதில் வெற்றிபெற முடியும்

Last Year Cutoff - 182/200 Questions or 273/300 marks
         கடந்த ஆண்டு (2016) - சுமார் 182/200 கேள்விகள் அல்லது 273/300 மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணிகிடைத்துள்ளது.

இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் Cutoff மதிப்பெண்கள்

          கடந்தாண்டு தேர்வு மிக எளிமையாக இருந்தது. மேலும் 5400 காலியிடங்கள் இருந்தன. ஆனால் இந்த ஆண்டு 9351 காலியிடங்கள் உள்ளன. மேலும் இந்த ஆண்டு மிதமான அளவு கேள்விகள் கேட்கப்பட்டால் சுமார் 175/200 கேள்விகள் அல்லது 262.5/300 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி அடைய வாய்ப்புள்ளது

Group 4 2016, Question Paper analysis

I. General Studies (பொது அறிவு)

1. நாட்டுநடப்பு நிகழ்வுகள் - 19 கேள்விகள்
2. அறிவியல் - 16 கேள்விகள் 
3. வரலாறு மற்றும் சுதந்திர போராட்டம் - 13 கேள்விகள்
4. பொருளாதாரம், சமூகம், அரசு திட்டங்கள் - 11 கேள்விகள்
5. அரசியலமைப்பு மற்றும் ஆட்சிமுறை - 10 கேள்விகள்
6. புவியியல் - 6 கேள்விகள்

மொத்தம் - 75 கேள்விகள்

II. திறனறிவு தேர்வு (Aptitude Test) - 25 கேள்விகள்

III. பொதுத்தமிழ் / பொது ஆங்கிலம் - 100 கேள்விகள்

மொத்தம் - 200 கேள்விகள் 



எவ்வாறு இத்தேர்வினில் வெற்றிபெறுவது?

          சரி, தற்போது நாம் இந்த தேர்வின் முக்கிய காரணிகளை தெரிந்து கொண்டோம். இதனை கொண்டு இத்தேர்வினை வெல்லும் யுத்தியை தயார்செய்யலாம்

         தேர்வினை வெற்றி பெற, தோராயமாக 175 கேள்விகள் சரியாக எழுத வேண்டும். எனவே எந்த படத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும்?

         முதலில் ஒருவர் பொதுத்தமிழ் / பொது ஆங்கிலம் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் 100 கேள்விகள் இந்த படத்தில் இருந்து மட்டுமே கேட்கப்படுகிறது. மேலும் இந்த கேள்விகள் அனைத்தும் தமிழ்நாடு பாடப்புத்தகங்களை தவிர வெளியே இருந்து கேட்கப்படுவதில்லை. எனவே அனைவரும் இந்த பகுதியில் சுமார் 90% மதிப்பெண் பெற்றுவிடுகிறாரகள். நீங்களும் இவ்வாறு பொதுத்தமிழ் /பொது ஆங்கிலத்தில் 90 கேள்விகள் சரியாக விடையளித்தலே இத்தேர்வில் வெற்றி பெற முடியும்

இரண்டாவது, வரலாறு மற்றும் சுதந்திர போராட்டம், புவியியல் பாடங்களில் இருந்து சுமார் 20 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவை அனைத்தும் தமிழ்நாடு பாட புத்தகங்களில் இருந்தே கேட்கப்படுகிறன்றன

மூன்றாவது, பொது அறிவு பகுதியில் இருந்து அதிக கேள்விகள் -

1. நாட்டுநடப்பு நிகழ்வுகள்,

2. அரசியலமைப்பு மற்றும் ஆட்சிமுறை,

3. பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசு திட்டங்கள் சார்ந்து கேட்கப்படுகிறது. இந்த படத்திட்டங்களுக்கு அதிக நபரிடம், சரியான புத்தகங்கள் கிடைப்பதில்லை. எனினும் இப்பாடங்களை படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும்

நான்காவது, அறிவியல் - அணைத்து தேர்வுகளிலும் சுமார் 15-20 கேள்விகள் அறிவியல் பகுதியில் இருந்து மட்டும் கேட்கப்படுகின்றன. பல பேர், அறிவியல் படங்களை படிப்பதே இல்லை. ஆனால் அறிவியல் பாடம் படிக்காமல், குடிமைப்பணி தேர்வில் வெற்றிபெறுவது மிக கடினம்.

இறுதியாக, திறனறிவு தேர்வு. இப்பகுதியில் இருந்து 25 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில் குறைந்த பட்சம் 20 - 25 கேள்விகளுக்கு சரியாக விடையளித்தால் தேர்வில் வெற்றிபெறுவது மிக சுலபம் ஆகிவிடும்

குறிப்பு : குடிமைப்பணி குரூப் 4 தேர்வில் இருந்து 90% கேள்விகள் தமிழ்நாடு பாடபுத்தகளில் இருந்து மட்டுமே கேட்கப்படுகிறது. எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் Cutoff மதிப்பெண் ஏறிக்கொண்டே போகிறது. 90% மதிப்பெண் இலக்காக உள்ளது


Books lists (பரிந்துரைக்கப்படும் பாடபுத்தங்கள்)

History and National movement

1. Tamilandu school books - 6th, 7th, 8th, 11th, 12th
2. Indian Culture - Tamilnadu 12std school book (some lessons)
3. Indian History (arihant)

Geography

1. Tamilnadu school books (only Indian Geography, special reference to Tamilnadu Geography)

Economy

1. Indian Economy (arihant)
2. Indian Economy (prathiyogitha darpan)
3. Economy Study materials - Shankar IAS institute

General Science

1. Tamilnadu School books (6th to 12th) - chapters related to syllabus only

Polity

1. Indian Polity (Laxmikanth)
2. Indian Polity (Arihant)

Aptitude Test

1. workout problems from Tamilnadu School books upto 10th std
2. solve all TNPSC previous years aptitude questions

General Tamil / General English

1. Tamilnadu School books alone - (mark the given chapters in syllabus in Tamilnadu school books and then prepare that chapters alone. that is sufficient)

If you find it helpful, share it with your friends.


No comments:

Post a Comment