Wednesday, 15 November 2017

TNPSC Economy - Green Revolution in India


TNPSC Indian Economy Study Materials - Green Revolution in India

பசுமை புரட்சி  (Green Revolution in India)

        1965 வது ஆண்டுகளுக்கு பிறகு, அறிமுகப்படுத்தப்பட்ட உயர் விளைச்சல் விதைகள் (High Yield Seeds), அதிக செயற்கை உரம் மற்றும் மேன்படுத்தப்பட்ட பாசானவசதியையே பசுமை புரட்சி என்று கூறப்படுகிறது

உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்பதே இந்த பசுமை புரட்சியின் நோக்கமாக இருந்தது

பசுமை புரட்சியின் 3 அடிப்படை கூறுகள்

1. விவசாய நிலம் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டது
2. இரட்டைப் பயிர் முறை பின்பற்றப்பட்டது
3. மேன்படுத்தப்பட்ட விதைகளை பயன்படுத்தப்பட்டது

பசுமை புரட்சியின் தந்தை எனப்படுபவர்? Dr.Norman Borlaug (டாக்டர். நர்மான் போர்லாக்)
இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை எனப்படுபவர்? Dr M.S.Swaminathan (M.S.ஸ்வாமிநாதன்)

பசுமை புரட்சியின் குறைபாடுகள்

1. அதிக உரம் பயன்படுத்தப்பட்டதால் சுற்றுசூழல் மாசடைந்து. மேலும் அவை சுகாதார பிரச்சனைக்கு வித்திட்டது
2. அதிக நீர் பயன்படுத்தப்பட்டதால், நிலத்தடிநீர் மட்டம் குறைந்தது. மண் வளம் சேதம் அடைந்தது
3. அதிக பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டது

மத்திய அரசு, அறிமுகப்படுத்திய வேளாண் திட்டம்

1. 1960-61 - Intensive Agriculture District Programme (IADP) - சுமார் 7 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வேளாண் கடன், உரம், மற்ற உபகரணங்கள் வழங்கப்பட்டது. விவசாயத்திற்கான கட்டமைப்பை உருவாக்குவது நோக்கமாக இருந்தது
2. 1964-65 ம் ஆண்டுகளில் Intensive agriculture Area Programme அறிமுகப்படுத்தப்பட்டது
3. 1966-67 ல் வேளாண் உற்பத்தியை பெருக்க அதிக அளவு மேன்படுத்தப்பட்ட விதைகளை பயன்படுத்தப்பட்டது (High yied varieties seeds are introduced) during this year all over india

முக்கிய விவசாய புரட்சி

உற்பத்தியாய் பெருகுவதே கீழ்கண்டுள்ள விவசாய புரட்சியின் நோக்கம்

1. பசுமை புரட்சி - தானியங்கள், கோதுமை மற்றும் காலநிலை தாவரங்கள்
2. வெள்ளை புரட்சி - பால் மற்றும் பால் பொருட்கள்
3. வெள்ளி புரட்சி - முட்டை மற்றும் கோழி
4. மஞ்சள் புரட்சி - சமையல் எண்ணெய்
5. நீல புரட்சி - மீன்
6. தங்கப் புரட்சி - தேன்
7. தங்க நார் புரட்சி - சணல்
8. வெள்ளி நார் புரட்சி - பருத்தி
9. பிங்க் புரட்சி - இறால் / இறைச்சி

Bringing Green Revolution to Eastern India Programme (BGREI)

          மத்திய அரசு, 2010-11 ம் ஆண்டு இரண்டாவது பசுமை புரட்சி அல்லது கிழக்கு பகுதிளுக்கு பசுமை புரட்சியை கொண்டுசெல்ல தீர்மானித்தது. இதன் நோக்கம் உணவுஉற்பத்தியை அதிகரிப்பதாக இருந்தது.

Download this as PDF - Green Revolution in India


No comments:

Post a Comment