Sunday, 12 November 2017

TNPSC Current affairs - November 1st week (5-11)

TNPSC Current affairs - November 1st week


1. அகமதாபாத் நெசவு தொழிலாளர் சங்கத்தை தொடங்கியவர் யார்? அனுசுயா சாராபாய். இவர் தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். இந்த இயக்கம் 1920 ம் ஆண்டு தொடங்கப்பட்டது

2. சர்வதேசச AYUSH(ஆயுஷ்) மாநாடு எங்கு நடைபெற்றது? துபாய்

3. மத்திய அரசு ஊழியர்கள் வீடு கடன் தொகையையை மத்திய அரசு எவ்வளவாக உயர்த்தியுள்ளது? 25 லட்சம்

4. பேரிடர் மேலாண்மைக்கு, இந்திய அரசு எந்த சமூக வலைத்தளத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது? Facebook

5. கரிம உலக மாநாடு (Organic World Congress) 2017 எங்கு நடைபெற்றது? கிரேட்டர் நொய்டா. இதனை மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்க் அவர்கள் துவக்கிவைத்தார்

6. கொல்கத்தா மற்றும் பங்களாதேஷ் இடையிலான புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரயில் பெயர்? பந்தன் எக்ஸ்பிரஸ்

7. UNESCO Creative Cities Network for contribution in music பட்டியலில் இடம்பெற்ற இந்திய நகரம்? சென்னை

8. US நியூ ஜெர்ஸியை நகரின் மேயராக தேர்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்தியர்? ரவீந்தர் சிங்க்

9. காஷ்மீர் பிரச்சைனக்கு தீர்வுகாண மத்திய அரசால் அமைக்க பட்ட சிறப்புகுழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? தினேஸ்வர் சர்மா

10. சீறாப்புராணத்தை எழுதியவர்? அமுதக்கவி உமறுப்புலவர்

11. அமுதக்கவி உமரிப்புலவருக்கு எங்கு தமிழக அரசு மணிமண்டபம் காட்டியது? எட்டையபுரம், தூத்துக்குடி மாவட்டம்

12. சீறாப்புராணம் யாரின் சிறப்பை பற்றி கூறுகிறது? மொஹம்மது நபிகள்

13. ட்விட்டர் (Twitter), தனது பதிவு எழுத்துக்களின் அளவை 140 எழுத்துக்களில் இருந்து எவ்வளவாக உயர்த்தியுள்ளது? 280

14. ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மிச்சேல் ஸ்டார்க் ஒரே போட்டியில் இரண்டு Hat-trick விக்கெட் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்

15. பெண்கள் ஏசியன் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றவர்? மேரி கொம்

16. உலக கதிர்வீச்சியல் தினம் ? நவம்பர் 8

17. பணமா பபெர்ஸ், போல் வெளிநாட்டில் பணம் பதுக்கியவர்களின் பட்டியல்வெளியிடப்பட்டு உள்ளது. அந்த பட்டியலின் பெயர்? பாரடைஸ் பபெர்ஸ் (Paradise Papers), இதனை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பு வெளியிட்டது

18. Conference of the Parties (COP) பருவநிலை மாற்றம் உச்சிமாநாடு எங்கு நடைபெற்றது? பான் (bonn) நகர் ஜெர்மனி

19. வாடிக்கையாளர் சேவையை மேன்படுத்த OLA நிறுவனம் எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது? Microsoft

20. புதிய நிதி அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்? ஹஸ்முக்ஹ் அதிய

21. உலகின் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலம் எங்குள்ளது? செனாப் (chenab) ஆற்றின் குறுக்கில், ஜம்மு காஷ்மீர் ல் உள்ளது. இதனை இந்திய ரயில்வே நிறுவனம் கட்டியுள்ளது

22. இந்தியா பங்களாதேஷ் ராணுவம் சேர்ந்து நடத்திய கூட்டுப்பயிற்சியின் பெயர்? Sampriti 7 (சம்ப்ரிதி 7)

23. புதிதாக புவியியல் அடையாளங்கள் (Geographical indication Tag) பெற்ற பொருட்கள் - பங்கனப்பள்ளி மாங்காய் - தெலுங்கானா ; போச்சம்பல்லி இகாட் சேலை - தெலுங்கானா; துளபஞ்சமி அரிசி மற்றும் கோபிந்தோபாக் அரிசி - மேற்கு வங்காளம் ; நாகாலாந்தின் சக்ஷ்சாங் சால்வ் ; துர்கி கல் சிற்பங்கள் மற்றும் எதிகொப்பூக்க பொம்மைகள் - ஆந்திர பிரதேஷ்

24. செயற்கை நுண்ணறிவு ரோபோவான ஷிபுயா மிராய் என்னும் ரோபோப்புக்கு வசிப்பிட சான்றிதழ் வழங்கிய நாடு? ஜப்பான்

25. வியட்நாமை தாக்கிய பலம்வாய்ந்த சூறாவளியின் பெயர்? டம்ரேய் சூறாவளி

26. world food 2017 மாநாட்டில், 918 கிலோ கிச்சடி செய்து இந்தியா புதிய கின்னஸ் சாதனை செய்துள்ளது

27. உலக சுனாமி விழிப்புணர்வு தினம்? நவம்பர் 5

28. சட்ட சேவை நாள் (Legal Service Day) என்று? நவம்பர் 9

29. உலக அறிவியல் தினம் ? நவம்பர் 10


No comments:

Post a Comment