Tuesday, 10 October 2017

TNPSC Polity Fundamental Rights part 4

TNPSC Polity Study Materials - Fundamental Rights

Right to Freedom (சுதந்திரத்திற்கான உரிமை)

1.      ஷரத்து 19 முதல் 22 வரை

ஷரத்து 19

1.      சுதந்திரம் தொடர்பான ஆறு உரிமைகளை பாதுகாத்தல்
·         பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்
·         அமைதியாகவும், ஆயுதமில்லாமல் ஒருங்கிணைத்தல்
·         சங்கங்கள் உருவாக்குதல்
·         இந்தியா முழுவதும் சுதந்திரமாக செல்லுதல்
·  இந்தியாவில் எந்த பகுதியிலும் குடியிருக்கவும் வசிக்கவும் உரிமை
·         எந்த ஒரு தொழிலையும் அல்லது வணிகம் செய்யவும் உரிமை

ஷரத்து  20

1.      குற்றங்களை பொறுத்து தண்டனை வழங்குதல் - அதாவது செய்த குற்றத்திற்கு மட்டும் தண்டனை பெறுதல் (அதிகாரிகளின் துஸ்பிரயோகத்தை தடுத்தல்)
· இதில், குற்றம் இழைக்கப்படும்பொழுது என்ன தண்டனை வழங்கப்படும் என்று இருக்கிறதோ அதை மட்டும் தான் வழங்க வேண்டும்
·         ஒரே குற்றத்திற்கு, இருமுறை தண்டனை வழங்க கூடாது
· குற்றம்,இழைத்தவரையே சாட்சியாளராக மாற சொல்லி கட்டாயப்படுத்த கூடாது என்று கூறப்பட்டுள்ளது

ஷரத்து 21

1.      வாழும் உரிமை  மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாத்த்தால்
2. இதில், எந்த ஒரு மனிதருக்கும் தனது வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை அரசு  மறுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது
3.     இந்த ஷரத்து 21 ன் கீழ், மொத்தம் 26 அனுமான உரிமைகள் உள்ளன என்று வேவேறு நீதிமன்ற தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது அவை :

ஷரத்து 21A

1.      கல்விக்கான உரிமை
2. இதில், அரசு 6 முதல் 14 வயது வரை உள்ள அணைத்து குழந்தைகளுக்கும், கட்டாயம், ஆரம்ப கல்வியை  இலவசமாக வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
3.     இந்த சட்டம், 86வது  அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 2002 ன் மூலம் கொண்டுவரப்பட்டது
4.     இதற்க்கு முன் இது, ஷரத்து 45 ன் கீழ், அரசு கட்டளை கோட்பாடு பகுதியில் கொடுக்கப்பட்டு இருந்தது

ஷரத்து 22
1.      கைது மற்றும் பாதுகாப்பில் எடுப்பதிற்கு, பாதுகாப்பு வழங்குதல்
2.     இது, தடுப்பு காவலில் எடுப்பதை தடுக்காது


Download TNPSC Polity Study materials - Fundamental rights Part 4


No comments:

Post a Comment