Tuesday, 10 October 2017

TNPSC Polity Fundamental Rights Part 3

TNPSC Polity Study Materials

Right to Equality (சம உரிமை) (article 14-18)
ஷரத்து 14
1.      சட்டம் மும் அனைவரும் சமம், மற்றும் அனைவர்க்கும் சட்டத்தின் சமமான பாதுகாப்பு
2.     இதில், சட்டம் மும் அனைவரும் சமம் என்பதால், பிரிட்டிஷ் அரசியலமைப்பில்  இருந்தும்
3.     சட்டத்தின் சமமான பாதுகாப்பு அம்சத்தை, அமெரிக்கா அரசியலமைப்பில் இருந்தும் எடுக்கப்பட்டவை
4.     மேலும், சட்டம் நியாயமான வகைப்படுதலை அனுமதிக்கிறது

ஷரத்து 15
1.      சில அடிப்படைகளில் பாகுபாடுக்கு தடை விதித்தல்
2.     அதாவது, மதம், நிறம், ஜாதி, பாலினம், மற்றும் பிறந்த இடத்தை கொண்டு பாகுபாடு பார்த்தால் கூடாது
3.     விதிவிலக்கு
·         அரசு, பெண்கள் மற்றும் குழந்தை நலனிற்க்காக பாகுபாடு பார்க்கலாம்
·         அரசு, சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவுயுற்றோரை மேம்படுத்த பாகுபாடு பார்க்கலாம்
·         மேலும், பழங்குடியினர், சிறுபான்மையினர் வளர்ச்சிக்காக

ஷரத்து 16
1.      அனைவருக்கும் சமமான வாய்ப்பு (அரசு பணிகளில்)
2.     அதாவது,  மதம், நிறம், ஜாதி, பாலினம், மற்றும் பிறந்த இடத்தை கொண்டு சம வாய்ப்பு அளிக்க  மறுக்கக்கூடாது
3.     விதிவிலக்கு
·         நாடாளுமன்றம், சில பணிகளுக்கு அப்பகுதியை சேர்ந்து இருக்கவேண்டும் என்று சட்டம் இயற்றலாம்
·         அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்த பட்ட சமூகத்தினர் மேம்பாட்டிற்காக சிறப்பு இட ஒதிக்கீடு வழங்கலாம் ;
·         சில மத சமயங்கள் பணிகளுக்கு அந்த மதத்தை சேர்ந்தவர்களை நியமனம் செய்யலாம்

குறிப்பு: இந்த விதிவிலக்கின் கீழ், 1979 ம் ஆண்டு மொராஜி அரசு தலைமையில், மண்டல் குழு அமைக்கப்பட்டது. மேலும் அந்த குழு அறிக்கை படி ஒட்டுமொத்தமாக 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது ; இதில் 27% OBC பிரிவிற்காகும்.

ஷரத்து 17

1.      தீண்டாமையை ஒலித்தல்
2.     இது ஒரு முழு உரிமை ஆகும்
3.     இதன் படி, 1955 ம் ஆண்டு Untouchability (Offence) act, கொண்டு வரப்பட்டது

ஷரத்து 18

1.      தலைப்புகள் ஒலித்தல் (Abolition of Titles)
2.     அரசு, ராணுவ மற்றும் கல்வி தலைப்புகளை தவிர அரசு எந்த ஒரு சிறப்பு தலைப்புகளையும் வழங்கக்கூடாது
3.     இந்திய குடிமகன், எந்த ஒரு சிறப்பு தலைப்பையும் வெளிநாட்டவர் வழங்கினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது
4.     வேறு நாட்டவர், இந்திய அமைப்பின் ஏதேனும் பொறுப்பில் இருப்பார் எனில், அவரும் ஜனாதிபதி ஒப்புதல் இன்றி எந்த ஒரு சிறப்பு தலைப்பையும் ஏற்றுக்கொள்ள கூடாது

மற்ற குறிப்பு

1.      நாட்டின் அவசரநிலையில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள (ஷரத்து 14 - 18) சம உரிமை - அணைத்து அம்சங்களும் தானாகவே நிறுத்திவைக்கப்படும்



Download TNPSC Polity Study Materials - Fundamental Rights Part 3

No comments:

Post a Comment