Tuesday, 10 October 2017

TNPSC Polity Fundamental Rights Part 2

TNPSC Polity Study Materials in Tamil

அடிப்படை உரிமை - பாகம் 2
இந்திய அரசியமைப்பு, பகுதி 3 ல் உள்ள சரத்து
1.      ஷரத்து 12 முதல் 35 வரை

ஷரத்து 12
1.      இந்த ஷரத்து 12, “State (அரசு) என்ற வார்த்தையை விளக்குக்குகிறது
2.     இதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நீதிபதிகள், நீதித்துறை, அரசு அதிகாரிகள், அலுவலகங்கள், பள்ளி நிறுவனம், அரசு அமைப்புகள், பொது  நிறுவனங்கள், போன்ற பலவற்றைஅரசுஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது

ஷரத்து 13
1.      இந்த ஷரத்து 13, அரசு  சட்டங்கள் எவை என்று வரையறை செய்யதுள்ளது  
2.     இதில், எந்த ஒரு சட்டமும், அடிப்படை உரிமையில் குறிப்பிட்ட அம்சங்களை கொண்டு இருக்கவேண்டும் என்றும். அவ்வாறு இல்லை என்றல் அது சட்டம் ஆகாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
3.     மேலும், இதனை உறுதி செய்யும் அதிகாரத்தினை, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதி மன்றத்திற்கு வழங்கியுள்ளது
4.     குறிப்பு: இந்த நீதி துறை ஆய்வின் மூலம், முற்போக்கு முற்போக்கான பொதுநல சட்டத்தை கொண்டுவர பெரும் தடையாக இருந்தது. எனவே 1971 ம் ஆண்டு, 24து அரசியல் அமைப்பு சட்ட திருத்தத்தில், ஷரத்து 368 ன் கீழ் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு சட்டதிருத்தத்திற்கு இந்த ஷரத்து 13, அம்சங்கள் பொருந்தாது என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டது
5.     மேலும் 1973 ம் ஆண்டு, கேசவனந்தா பாரதி vs மத்திய அரசு, வழக்கில் உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பை பாதிக்காமல், அடிப்படை உரிமையில் அரசியலமைப்பு சட்ட திருத்தும் செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியது

அடிப்படை உரிமைகள்
            அரசியல் அமைப்பில், 6 அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை
1.      சம உரிமை (ஷரத்து 14-18)
2.     சுதந்திற்கான உரிமை (ஷரத்து 19-22)
3.     சுரண்டலுக்கு எதிரான உரிமை (ஷரத்து 23-24)
4.     மத சுதந்திரத்திற்கான உரிமை (ஷரத்து 25-28)
5.     கலாச்சார மற்றும் கல்வி உரிமைகள் (ஷரத்து 29-30)
6.     அரசியலமைப்பு நிவாரங்களுக்கான உரிமை (ஷரத்து 32)

இதை, ஷரத்து 31, சொத்துக்கான உரிமை - 44வது சட்ட திருத்தும் 1978 மூலம் அடிப்படை உரிமையில் இருந்து நீக்கப்பட்டு, ஷரத்து 300-A சட்ட உரிமையாக மாற்றப்பட்டது


Download TNPSC Polity Study Materials - Fundamental Rights Part 2

No comments:

Post a Comment