Tuesday, 10 October 2017

TNPSC Polity Fundamental Rights Part 1

TNPSC Polity Study Materials in Tamil

Fundamental Rights (அடிப்படை உரிமைகள்)
முன்னுரை

1.      அடிப்படை உரிமை, இந்தியா அரசியலமைப்பில் பாகம் மூன்றில் விளக்கப்பட்டுள்ளது. மேலும் ஷரத்து 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகளை பற்றி கூறப்பட்டுள்ளது
2.     அரசியலமைப்பின் இந்த பகுதியை, “Magna Carta” (மகாசாசனம்)  என்று அழைக்கப்படுகிறது
3.     இந்த அடிப்படை உரிமை முறை, அமெரிக்கா அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது
4.     இதன் நோக்கம், சட்டத்தின் அரசை நிலைநாட்டுவதாகும்
5.     மேலும் இதில், தனிநபர் மற்றும் குழு உரிமைகளை பற்றி கூறப்பட்டுள்ளது
6.     இதில் ஷரத்து 17 மற்றும் 24, முழு உரிமைஆகும்;
7.      மேலும் ஷரத்து 15 (பாகுபாட்டிற்கு எதிரான உரிமை), ஷரத்து 17( தீண்டாமைக்கு ஒலித்தல்), ஷரத்து 23, 24 - ஆகியவை தனிநபர் மேலும் செயல்படுத்தலாம்

அடிப்படை உரிமைகளின் சிறப்பம்சங்கள்
1.      சில அடிப்படை உரிமைகள், குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும்
2.     பெரும்பாலான அடிப்படை உரிமைகள் முழு உரிமைகள் அல்ல. அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
3.     பெரும்பாலான, அடிப்படை உரிமை அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிரானது, சில உரிமைகள் தனிநபர் நடவடிக்கைக்கு எதிராக இருக்கும்
4.     சில உரிமைகள் எதிர்மறையாகவும், சிலவற்று நேர்மறையாகவும் இருக்கும்
5.     இவை அனைத்திற்கும் , இந்திய உச்ச நீதிமன்றம் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் அளிக்கின்றது. ஷரத்து 32 (SC), ஷரத்து 226 (HC)
6.     இவை நிரந்தரமான உரிமைகள் அல்ல
7.      இவை, தேசிய அவரசரநிலை பொழுது இடைநீக்கம் செய்யப்படலாம்; எனினும் ஷரத்து 20, 21 - அமலில் இருக்கும்; மேலும் ஷரத்து 19 அரசு அறிவித்தல் மட்டுமே, நிறுத்திவைக்கப்படும்
8.     ராணுவம், மற்றும் துணை ராணுவ இயக்கங்களுக்கு, இவைகளில் கட்டுப்பாடு அரசு விதிக்கலாம் (ஷரத்து 33)
9.     மேலும், ராணுவ ஆட்சி, இருக்கும் பொழுதும் இந்த அடிப்படை உரிமைகள் நிறுத்திவைக்கப்படும் (ஷரத்து 34)



Website – www.tnpscexams.org
Video Tutorial at YouTube - https://youtu.be/2e25_DLVTqw

Download TNPSC Polity Study Materials- Fundamental Rights Part 1


No comments:

Post a Comment