Tuesday, 10 October 2017

TNPSC Indian Economy Planning Commission in India

TNPSC Indian Economy


Planning Commission in India (பொருளாதார திட்டமிடல் குழு)


1.   இந்தியாவின், முதல் பொருளாதார திட்டமிடல் குழு, 15 மார்ச் 1950 ம் ஆண்டு, Pt. ஜவாஹர்லால் நேரு தலைமையில் அமைக்கப்பட்டது
2.   இதன்நோக்கம், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கான திட்டங்களை வகுப்பதாகும்
3.   இது ஒரு ஆலோசனை குழுவாகும். இது அரசுக்கு கொள்கைகளை பரிந்துரை செய்யும்
4.  அரசியலமைப்பில் இதை பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே இது அரசியலமைப்பு அமைப்பு அல்ல. (Non-Constitutional Body)
5.   மேலும் இது, அரசு நிர்வாக உத்தரவுப்படி, 15 மார்ச் 1950 ம் ஆண்டு அமைக்கப்பட்டது

திட்டமிடல் கமிஷனின் கட்டமைப்பு

1.   இதன் தலைவர், பாரத பிரதமவர் ஆவர்.
2.   துணை தலைவர், அரசால்நியமிக்கப்படுவர். இவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து இருக்கும். மேலும் உறுப்பினர்களுக்கு மாநில அமைச்சர் அதிகாரம் இருக்கும்
3.   திட்டமிடல் கமிஷன் உறுப்பினர்களுக்கு, பதவி காலம், கல்வி தகுதி, மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி எதுவும் கூறப்படவில்லை
4.  திட்டமிடல் கமிஷனின், மூன்று பிரிவுகளாக செயல்படும். அவை நிர்வாக பிரிவு, பொது பிரிவு மற்றும் உட் பிரிவு (விவசாயம், கிராமப்புற வளர்ச்சி etc..)


திட்டமிடல் ஆணையத்தின் செயல்பாடுகள்

1.   நாட்டின் உடல் மூலதனம் மற்றும் மனித வளங்களை மதிப்பீடு செய்தல்
2.   மனித வளங்களை திறம்பட மற்றும் சமநிலையான முறையில் பயன்படுத்துவதற்கான  திட்டத்தை தயாரித்தல்
3.   திட்டத்தின் பல்வேறு கட்டங்களை தீர்மானித்தல், மற்றும் முன்னுரிமை அடிப்படையில் வளங்களை ஒதுக்கீடு செய்தல்
4.  பொருளாதார வளர்ச்சியில் உள்ள தடைகளை கண்டறிதல் மற்றும் அதனை தவிர்க்க ஆலோசனை வழங்குதல்
5.   செயல்ப்படுத்தப்பட்ட திட்டங்களை அவ்வப்போது மதிப்பிடுதல், மற்றும் மாற்று நடவடிக்கையை ஆவணசெய்தல்
6.   மற்றும் - மத்திய மாநில அரசுகளுக்கு, இதர ஆலோசனை வழங்குவதாகும்


 Download TNPSC Indian Economy - Planning Commission in India

Website – www.tnpscexam.org


No comments:

Post a Comment