Tuesday, 24 October 2017

TNPSC Indian Economy Five Year Plans (7-9)

TNPSC Indian Economy Study Materials – Five Year Plans Assessments (7-9)

ஏழாவது ஐந்தாண்டு திட்டம் (1985-1990)

  1. உணவு பொருள் உற்பத்தி (ம) வேலைவாய்ப்பிற்கு அதிக முக்கியத்துவம்
  2. திட்டமிடுதல்   பரவலாக்க பட்டது.
  3. கல்வி, கிராம நல வாழ்வு, மின்சக்தி, குடிநீர் முக்கியத்துவம்
  4. தொழிற்சாலைகளின் உற்பத்தியை, தொழிநுட்பம் மூலம் அதிகரிக்க திட்டம் இடப்பட்டது
  5. Jawahar Rozar Yojana (1989) போன்ற திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது  (இது கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்)
  6. இந்திய வளர்ச்சி முதன்முறையாக, ராஜ் கிருஷ்ணா அவர்கள் கூறிய  இந்து வளர்ச்சி விகிதத்தை தாண்டியது
  7. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6% ஆக இருந்தது

Annual Plan (ஓர் ஆண்டு திட்டம்)

  1. 1990 ம் ஆண்டு 8வது ஐந்தாண்டு திட்டம் தொடங்கப்படவில்லை
  2. காரணம் - மிக வேகமாக மாறும் அரசியல் சூழ்நிலை (ஆட்சி மாற்றம்)
  3. எனவே, 1990-92 ஓர் திட்டமாக கருதப்படுகிறது
  4. இந்த காலம், இந்தியாவில் பொருளாதார உறுதியற்ற தன்மை நிலவியது.
  5. இந்த காலங்களில், இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு வெறும் 1 பில்லியன் டாலராக இருந்தது

எட்டாவது திட்டம்  (1992-97)

  1. திட்ட மாதிரி - ஜான் மில்லர்
  2. 1991 ஜூலை 24,  புதிய பொருளாதார கொள்கை (அ) ராவ் மோகன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
  3. இது இந்தியா பொருளாதார முறையில்   தாராளமயமாக்கல், பூகோளமயமாக்கல், தனியார்மயமாக்கல் சீர்திருத்தம் செய்யபட்ட காலம்
  4. திட்ட குழுவின் பங்கு கட்டளையிடும் நிலையில் இருந்து சுட்டிக்காட்டும் நிலைக்கு மாறியது
  5. தொழில்கள் பொது துறையிலிருந்து தனியாருக்கு மாற்றப்பட்டது
  6. மனித வள மேம்பாடு அறிமுகம் செய்யப்பட்டது
  7. நோக்கம் - 2000 வது ஆண்டிற்கு முழு வேலையுடைமை, ஊக்க தொகை மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தல்
  8. செயல்பாடு - பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் துறைக்கு திறந்துவிடப்பட்டது
  9. மின்சார உற்பத்திக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது

ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் (1997-2002)

  1. ஒப்புதல் - 1999 ஜனவரி ; காரணம்  - மத்தியில் ஆட்சி மாற்றம், நிலையற்ற  அரசு
  2. இத்திட்ட காலத்தின் தாரக மந்திரம் - சமூக நீதி மற்றும் சமத்துவதுடன் வளர்ச்சி
  3. ஏழு அடிப்படை குறைந்தபட்ச சேவை திட்டம் ( Seven Minimum Basic Service) அறிமுகம் செய்யப்பட்டது ( இதில் சுத்தமான குடிநீர், அடிப்படை கல்வி, பொது விநியோகம் அடங்கும்)
  4. நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
  5. திட்டமிடல் பரவலாக்கப்பட்டது
  6. நோக்கம் - மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தல், சுய உதவி குழு, கூட்டுறவு  - முக்கியத்துவம்


Download - TNPSC Indian Economy Study Materials Five Year Plans (7-9)


No comments:

Post a Comment