Tuesday, 31 October 2017

TNPSC Indian Economy - Agriculture

TNPSC Indian Economy Study Materials - Agriculture in Indian (Part 1)

Agriculture in India (வேளாண்மை)

இந்தியாவின் 58% மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையையே நம்பியுள்ளனர். எனவே வேளாண்துறையின் வளர்ச்சி மிக முக்கியமாகும்.

மத்திய அரசு, வேளாண்துறையில் 4% வளர்ச்சியை எட்ட தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. இது வறுமையை  ஒழித்திடவும், கிராமப்புற வளர்ச்சிக்கும், விவசாயின் லாபத்தை பெருக்கவும்  மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளச்சிக்கு மிக முக்கியமானது

ஏழாவது அட்டவணை படி, வேளாண்மை மாநில பட்டியலில் வருகிறது. எனவே பெரும்பாலுமான வேளாண் திட்டத்தை மாநில அரசே இயற்றும்.  இந்திய வேளாண் திட்டம் தன்னிறைவு மற்றும் தற்சார்பு  போன்றவை உள்ளடக்கியுள்ளது

இங்கு வேளாண்துறையில்  - விவசாயம், காடுவளர்தல், மீன் பிடித்தல், மரம் வெட்டுதல் மற்றும் வேளாண் துறை சார்ந்த துறைகளை உள்ளடங்கும்

இந்திய வேளாண்துறையின் அம்சங்கள்

  1. மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்கும் துறை - சுமார் 58% மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு  வேளாண்துறையையே நம்பியுள்ளனர்
  2. தொழித்துறை வளர்ச்சிக்கு அடிப்படை - பருத்தி, சர்க்கரை, எண்ணெய் போன்ற தொழிற்சாலைகளிக்கு மூல பொருட்கள் விவசாயத்தை நம்பியுள்ளது.
  3. மொத உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு - இந்தியாவின் ஒட்டுமொத்த GDP (மொத்த  உள்நாட்டு உற்பத்தி) யில், 17% வேளாண்துறையின் பங்களிப்பாகும்
  4. இந்திய ஏற்றுமதி - வேளாண்துறை சுமார் 38% ஏற்றுமதிக்கு பங்களிக்கிறது. eg. டீ, காபி, சணல், நறுமணப்பொருட்கள்
  5. சர்வதேச முக்கியத்துவம் - இந்தியா தேங்காய், மாங்காய், வாழைப்பழம், பால், முந்திரி, மிளகு, மஞ்சள், இஞ்சி போன்ற பொருட்கள் உற்பத்தியில் முதல் இடத்திலும், அரிசி, சக்கரை, கோதுமை, பருத்தி, பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் உள்ளது


இந்திய உணவு தானிய உற்பத்தி

  1. இந்தியா (2017) சுமார் 273 மில்லியன் டன் உணவு தானியத்தை ஆண்டு ஒன்றிற்கு உற்பத்தி செய்கிறது
  2. இவை,

உணவு தானிய வகைகள்

  1. அரிசி - 109.15 MT
  2. கோதுமை - 97.44 MT
  3. தானியங்கள் - 44.39 MT
  4. சோளம் - 26.14 MT
  5. பருப்பு - 22.40 MT
  6. கடலை - 9 MT
  7. துவரம் - 4.60 MT
  8. உளுந்து - 2.03 MT

எண்ணெய் விதைகள்
  1. சோயாபீன் - 14MT
  2. கடலை - 7.65 MT
  3. ஆமணக்கு - 1.55 MT
மற்றும்,
  1. பருத்தி - 32.58 MB
  2. சக்கரை - 306.03 MT

No comments:

Post a Comment