Saturday, 21 October 2017

TNPSC Current Affairs October 2nd week


TNPSC Current Affairs October 2nd week in Tamil

1. அணைத்து கிராமங்களுக்கும் மின்னிணைப்பு வழங்க “Solar Briefcase” என்னும் திட்டத்தை அறிமுகம் செய்த மாநில அரசு எது? உத்தரகண்ட்

2. வெளிநாட்டு கல்லூரி பேராசிரியர்களை, உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் பாடம் எடுக்க வகுக்கப்பட்ட திட்டம்? வஜ்ரா ஆசிரியர் திட்டம் (VAJRA Faculty Scheme). இத்திட்டத்தின் கீழ், வருடம் 1000 பேராசிரியர் தேர்வு செய்யப்படுவார்கள்

3. இந்தியாவில், முதல் ஆதார் விபரம் மூலம், பயணிகளை அனுமதிக்கும் முறை எந்த விமான நிலையத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது? பெங்களூரு (கெம்ப் கவுடா சர்வதேச விமான நிலையம்)

4. இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதியக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? P.V.ரெட்டி ; இக்குழு கீழ் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பள உயர்வை பற்றி பரிந்துரை செய்யும். உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி சம்பளம் நாடாளுமன்றத்தில் தீர்மானம் செய்யப்படுகிறது

5. அஞ்சல் துறை, ஆயுள் காப்பீடு வாடிக்கையாளரை அதிகரிக்க அறிமுகம் செய்துள்ள திட்டம்? சம்பூர்ண பீமா யோஜனா

6. மத்திய ஜவுளி துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி தேசிய கைவினைப்பொருட்கள் அருங்காட்சியத்தை எங்கு துவக்கிவைத்தார்? நொய்டா, உத்தரப்பிரதேஷம்

7. சென்னை மெட்ரோ நிறுவனம், புதிய சைக்கிள் சேவையை துவங்கியுள்ளது. இதன் கீழ் ஓவ்வொரு வாடிக்கையாளருக்கும் மாதம் 100 மணிநேரம் இலவசமாக மிதிவண்டியை பயன்படுத்திக்கொள்ளலாம்

8. அசாம் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர்? ஜெகதீஷ் முல்கி

9. சர்வதேச யோகா மாநாடு எங்கு நடைபெற்றது? புது டெல்லி. இதனை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு அவரால் திறந்துவைத்தார்

10. SBI நிறுவனம், இந்தியாவின் மிக பெரிய கண்டுபிடிப்பு மையத்தை எங்கு அமைக்கவுள்ளது? மும்பை

11.இந்தியாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? அனுபம் கெர்

12. International Puppet Festival (சர்வதேச கைப்பாவை திருவிழா) எங்கு நடைபெற்றது? கொல்கத்தா

13. G-20 நாடுகள் கூட்டமைப்பின் நிதித்துறை அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் மாநாடு எங்கு நடைபெற்றது? வாசிங்டன், அமெரிக்கா

14. இந்திய விமான படை அறிமுகம் செய்துள்ள உடல் நலம் / ஆரோக்கியம் பற்றி அறிய உதவும் செயலியின் பெயர்? MedWatch

15. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ராணுவ கூட்டு பயிற்சியின் பெயர்? மித்ரா சக்தி, இந்த ஆண்டு புனேவில் நடைபெற்றது

16. இலக்கியத்திற்கான முதல் நூற்றாண்டு தேசிய விருது யாருக்கு வழங்கப்பட்டது? நமிதா கோகலே

17. UNESCO ன் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்? ஆட்ரி அஜோலே (Audrey Azoulay)

18. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்? ரிச்சர்ட் தேலர் ; இவர்க்கு இவரது Behavioral Economics (நடத்தை பொருளாதாரத்தை) பற்றின கூற்றை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது

19. உலகளாவிய பட்டினி குறீயிடு படி இந்திய எந்த இடத்தில்உள்ளது ? 100 வது இடம்

20. டாடா தொலைபேசி சேவை நிறுவனம், எந்த நிறுவனத்துடன் இணைய உள்ளது? பாரதி ஏர்டெல்

21. பாரத் பைனான்ஸ் நிறுவனத்தை எந்த வங்கி வாங்கியுள்ளது? இண்டஸ் இந்த் வங்கி

22. உலகின் மிக பெரிய இயந்திர எரிப்பு (Combustion) ஆராய்ச்சி மையம் எங்கு அமைக்கப்படவுள்ளது? IIT மெட்ராஸ் (சென்னை)

23. An Insignificant Man என்பது யாரை பற்றின ஆவணப்படம்? அரவிந்த் கெஜ்ரிவால்

24. அனுபமா ராமசந்திரன், எந்த விளையாட்டு துறை வீரர்? ஸ்னூக்கர்

25. உலக வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய கலப்பு ஜோடி? ஜேம்சன் நிங்தோஜம் மற்றும் அங்கிதா பகத்

26. சாம்சங் (samsung) நிறுவனம் இந்தியாவின் எந்த கல்வி நிறுவனத்துடன் இணைந்து, Digital Academy தொடங்கவுள்ளது? IIT கரக்பூர்

27. ஜனாதிபதி ராம் நாத் கோவிந், இந்திய குத்துசண்டை பயிற்சியாளர் குர்பாஸ் சிங் சந்து அவர்களை பாராட்டி தேசிய விருதினை வழங்கினார்

28. குருசாய்தட் எந்த விளையாட்டு வீரர்? பேட்மிட்டன்

29. U 17 சர்வதேச கால்பந்து போட்டியின் முதல் பெண் நடுவர் (referee) யார்? எஸ்தர் ஸ்டூப்லி இவர் ஸ்விஸ்ர்லாந்து நாட்டை சேர்ந்தவர்

30. உலக அஞ்சலகம் தினம் - அக்டோபர் 9

31. India Water Week 2017 (தண்ணீர் வாரம்) இந்த ஆண்டு எப்பொழுது கடைபிடிக்கப்படுகிறது? அக்டோபர் 10 முதல் 14.

32. சர்வதேச பெண் குழந்தைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது ? அக்டோபர் 14

33. தேசிய பெண் குழந்தைகள் வாரம் எப்பொழுது கடைபிடிக்கப்படுகிறது? அக்டோபர் 9 முதல் 14 வரை

34. உலக தரநிலை தினம் - அக்டோபர் 14


Download this as PDF - TNPSC Current Affairs October 2nd week

No comments:

Post a Comment