Wednesday, 11 October 2017

TNPSC Current affairs October 1st week




TNPSC October 1st week Current affairs in Tamil

National

1. மத்திய அரசு, எந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து, சமூக வலைத்தள தகவல்கள் மூலம், வரி ஏய்ப்போரை கண்டறியுள்ளது? L&T நிறுவனத்துடன்

2. டெல்லியில் உள்ள, மகாத்மா காந்தியின் நினைவகத்தின் பெயர்? ராஜகத்

3. இந்தியா 40 ஆண்டிற்கு பிறகு, எந்த நாட்டிடம் இருந்து முதல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யவுள்ளது? அமெரிக்கா

4. குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த, யார் தலைமையில் OBC உட்பிரிவினை ஆய்வு செய்ய, 5 நபர் கொண்ட குழு அமைத்துள்ளார்? G.ரோகினி. இவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவர்

5.உலக தொழில் முனைவோர் உச்சிமாநாடு எங்கு நடைபெறவுள்ளது? ஹைதெராபாத்

6. IMTechon 2017, சர்வதேச மருத்துவ மாநாடு எங்கு நடைபெற்றது? சண்டிகர்

7. Online Harasment (இணையதள துன்புறுத்தல்) பட்டியலில், ஆசியா பசிபிக் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில உள்ளது

8. 14 வது, இந்தியா ஐரோப்பா உச்சிமாநாடு எங்கு நடைபெறவுள்ளது? புது டெல்லி

9. மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள, Sovereign Gold Scheme (இறையாண்மை தங்க திட்டம்) - 3 ம், திட்ட காலம்? 8 ஆண்டு. இதில் முதலீடு செய்வோருக்கு 2.5% வட்டியும் வழங்கப்படும். இதில் 1 கிராம் முதல் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம்

International

1. உலகின் மிக பெரிய மற்றும் சக்தி வாய்ந்த அணு சக்தியில் இயங்கவல்ல பனிக்கட்டி தகர்க்கும் கப்பலை அறிமுகம் செய்த நாடு? ரஷ்யா

2. 8வது SAARC நாடாளுமன்ற மாநாடு எங்கு நடைபெற்றது ? ஸ்ரீ லங்கா

3. உலக அரசாங்க உச்சிமாநாடு எங்கு நடைபெற்றது? துபாய், இதில் இந்தியா, சிறப்பு விருந்தினராக பங்கேற்றது

4. ASEAN -இந்தியா இசை திருவிழா எங்கு நடைபெற்றது? டெல்லி

Economy

1. Flipkart நிருவனம் துவங்கியுள்ள, பெரிய உபகரணங்கள் பிராண்ட் பெயர் என்ன? Marq

Environment

1. மூன்றாவது தேசிய வனவிலங்கு செயல் திட்டம் காலம் - 2017 முதல் 2031

Science and Tech

1. எந்த நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, குவாண்டம் நெட்ஒர்க்ஸ் மூலம், ஊடுருவமுடியாத முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டனர்? சீனா மற்றும் ஆஸ்திரியா

2. மிக பாதுகாப்பான தொழிநுட்பமான ‘Blockchain Technology’ மூலம் உருவாக்கப்பட்ட முதல் தொலைபேசியை அறிமுகப்படுத்திய நிறுவனம்? VVDN, இதன் தலைநகரம் குருகிராம், ஹரியானா மாநிலத்தில் உள்ளது. இந்த நிறுவனம் அறிமுகம் செய்த தொலைபேசியின் பெயர் - Bitvault

3. HDFC வங்கி அறிமுகப்படுத்திய, புதிய நுண்ணறிவு ரோபோவின் பெயர்? Neo. இதற்க்கு முன் SPOK என்னும் ரோபோவை அறிமுகம் செய்தது

Appointment and awards

1. மருத்துவ நோபல் பரிசு பெற்றவர்கள்? ஜெப்ரி C ஹால், மைகே ல்ரோசபாஷ், மைகேல் W எங். இவர்களுக்கு, புவி உயிரியல் கடிகாரங்களை கட்டுப்படுத்தும் மூலக்கூறு நுட்பத்தை கண்டுபிடித்தற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட உயிர் பழ ஈ ஆகும்

2. இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்? ரெய்னர் வெய்ஸ்ஸ், பார்ரி பாரிஸ், கிப் த்ரோன். இவர்கள் வளிமண்டலத்தில் உள்ள ஈர்ப்பு விசைகளை கண்டறிந்ததிற்கு இப்பரிசு வழங்கப்பட்டது. இவர்கள் US ஐ சேர்ந்தவர்கள்

3. உலக சுகாதார அமைப்பான WHO துணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? Dr.சௌம்யா ஸ்வாமிநாதன். இவர், TB, HIV ஆராய்ச்சியாளர். மேலும் இவர் தமிழன்கதை சேர்ந்தவர். பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் MS ஸ்வாமிநாதன் அவர்களின் மகள்

4. SBI வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? ராஜ்னீஷ் குமார் (Rajnish Kumar ) ஆவர்

5.வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்றவர்கள்? ஜாகியூஸ் டுபோசேட், ஜோக்கிம் பிராங், ரிச்சர்ட் ஹென்டர்சன். இவர்களுக்கு, முக்குறுகளை முப்பரிமாண முறையில் துல்லியமாக படம் பிடிக்க உதவும் கிரியோ எலக்ட்ரான் நுண்ணோக்கியை வடிவமைத்தற்கு இப்பரிசு வழங்கப்பட்டது

6. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்? கஸுகோ இஷிகுரோ, இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். இவர் பிறந்தது ஜப்பான். இவருக்கு இவரது நாவல் ‘The Remains of the Day’ க்கு நோபல் பரிசு கிடைத்தது

7. MIT, US கல்வி நிறுவனம், புதிய Rapid Test முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரத்தத்தில் உள்ள ஜிகா மற்றும் டெங்கு வைரஸ் பற்றி உடனடியாக அறியமுடியும் (தற்பொழுது, வைரஸ் இருப்பதை உறுதி செய்ய ஒருவாரம் ஆகும்)

8. Adobe நிறுவனம், ஆதார் அடிப்படையிலான அங்கிகார முறையை தனது டிஜிட்டல் கையொப்பம் முறையுடன் இணைக்க உள்ளது

9. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நிறுவனம்? i can NGO அமைப்பு. i can (International Campaign to abolish nuclear weapon). இந்த தன்னார்வு நிறுவனம் சுமார் 100 நாடுகளில் செயல்படுகிறது

Sports

1.மஹாவீர் ரகுநாதன், முதல் ஐரோப்பா ரேஸிங் தலைப்பை வென்றுள்ளார்

Important Days 

1. உலக சைவஉணவு தினம் என்று கொண்டாட படுகிறது - அக்டோபர் 1

2. சர்வதேச அகிம்சை தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது? அக்டோபர் 2, காந்தி பிறந்தநாள் அன்று

3.World habitat day (உலக வாழ்விடன் நாள்) என்று கடைபிடிக்கப்படுகிறது? அக்டோபர் 2

4. உலக விண்வெளி வாரம்? அக்டோபர் 4 முதல் 10 வரை

5. உலக ஆசிரியர் தினம் என்று கொண்டாடப்படுகிறது? அக்டோபர் 5


Download this as PDF - TNPSC Current affairs October 1st week











No comments:

Post a Comment