Monday, 9 October 2017

TNPSC Current Affairs June 4th week

TNPSC Current affairs in Tamil


June 22

PM’s Yoga Award

1.      ராமமணி ஐயங்கார் மெமோரியல் யோகா நிறுவனம், புனே - முதல் PM’s யோகா விருதினை பெற்றுள்ளது

Robot - போக்குவரத்தை கட்டுப்படுத்தும் ரோபோட்

1.      போக்குவரத்தை கட்டுப்படுத்தும் ரோபோட் - முதன் முதலில் இந்தியாவில், மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள இண்டோர் நகரில் - அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
2.     இதனை - இன்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த இரண்டு பேராசிரியர் உருவாக்கியுள்ளனர்

முதல் 5 விலையுயர்ந்த நகரம் - வெளிநாட்டவர் வாழ்வதற்கு

1.      மெர்சர் நிறுவனம் - நடத்திய -  இந்தியாவில் வெளிநாட்டவர் வாழ்வதற்கு விலையுயர்ந்த நகரமாக - மும்பை உள்ளது - அடுத்த இடத்தில - டெல்லி, 3. சென்னை ஆகும்
2.     உலக அளவில் - மும்பை - 57ம், டெல்லி - 99ம் , சென்னை - 135 து இடம் ஆகும்

World’s first virtual train

1.      உலகின் முதல் Virtual Train (மெய்நிகர் தடங்களில்) ஓடும் ரயில் - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
2.     இது முழுக்க சென்சார் வசதி கொண்டு இயங்கக்கூடியவை - சாலையில் செல்ல கூடியவை
3.     மேலும் இது அதிகபட்சமாக - 70 km வேகத்தில்  செல்லும் - மின்சாரம் பாட்டெரியில் ஓட கூடியவை


Open Loop Metro Card

1.      Axis வங்கி – Kochi  மெட்ரோ உடன் இணைந்து - Open Loop Metro card ஐ அறிமுகப்படுத்தி உள்ளது
2.     இது ஒரு டிஜிட்டல் பணப்பை ஆகும்

Sainj Hydropower Project

1.      Sainj Hydropower Project, ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் - சைஞ் நதி குறுக்கே கட்டப்பட்டு, மின்சாரஉற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது
2.     சைஞ் நதி - பியாஸ் நதியின் துணை நதியாகும்

உலகின் சிறந்த விமான சேவை

1.      உலகின் சிறந்த விமான சேவை அளிக்கும் நிறுவம் - என்று கத்தார் விமான சேவை நிறுவனம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது

NASA - flexible solar array

1.      NASA - Roll-Out Solar Array - (நெகிழ்வான சூரிய வரிசை) - வெற்றிகரமாக விண்வெளியில் சோதிக்கப்பட்டது
2.     இது - நெகிழ்வுத்தன்மை மற்றும் குறைந்த இடை கொண்டதாகும்Anil Kumble

1.      Anil Kumble - இந்தியா கிரிக்கெட் பயிற்சி ஆளர் பதவியில் ராஜினாமா செய்துவிட்டார்June 23

Operation Swarn

1.      ஆபரேஷன் ஸ்வரன்  - ரயில்வே துறையுடன் சம்மந்தமுடையவை
2.     இதன் நோக்கம் - முதல் கட்டமாக ராஜதானி, சதாப்தி போன்ற ரயில்களில் சேவை தரத்தை மேம்படுத்துவதாகும்

Open defecation Free states

1.      இந்தியாவின் முதல் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாநிலமாக - சிக்கிம் அறிவிக்கப்பட்டது
2.     அதனை தொடர்ந்து - ஹிமாச்சல் பிரதேஷ் - 2 மற்றும்
3.     3 ம் மாநிலமாக - கேரள அறிவிக்கப்பட்டுள்ளது

பிரதம மந்த்ரி அவாஸ் யோஜனா

1.      இது - அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆகும்
2.     தொடங்கப்பட்ட ஆண்டு - 25 ஜூன் 2015; இதற்க்கு முன் இது housing for all திட்டமாக இருந்தது
3.     இந்த திட்டத்தின் கீழ் - 1 L முதல் 2.30 லட்சம் வரை மத்திய அரசு மானியம் தரும்
4.     மேலும் 6,00,000 வரை - குறைந்த வட்டி விகிதம் 6.5% க்கு - வங்கியில் கடன் பெற்றுக்கொள்ளலாம்
5.     மேலும் 35% - பொருளாதார வகையில் நலிவு மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்க்கு முன்னுரிமை வழங்கப்படும்
6.     இது - மொத்தம் 3 கட்டமாக - 2022 ஆண்டிற்குள் - 2 கோடி வீடுகள் காட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது

Test and Treat Strategy

1.      மிசோரம் அரசு - HIV aids - பாதிக்கப்பட்ட மக்களுக்கு - மருத்துவ வசதி தரமாக கிடைப்பதற்கு -  Test and Treat Strategy  என்னும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது
2.     இதன் மூலம் - இலவச - anti-Retroviral therapy வழங்கப்படும்
3.     மிசோரம் தலைநகரம் - Aizawl


UN உலக மக்கள் தொகை எதிர்பார்ப்பு அறிக்கை

1.      UN World Population Prospects - அறிக்கையின் படி - 2017 ம் ஆண்டு - உலக மக்கள் தொகை - 800 கோடியை தொடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது
2.     மேலும் - இந்திய மக்கள் தொகை 2024 ம் ஆண்டிற்குள் - சீனா மக்கள் தொகையை விட அதிகமாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது
3.     இந்தியா சுமார் - 18% வித உலக மக்களை கொண்டுள்ளது

2017 bio international convention

1.      bio international convention 2017 - US, San Diego நகரில் தொடங்கியது
2.     இதில் - Y S Chowdry - India Biotech Handbook 2017 என்னும் புத்தகத்தை வெளியிட்டார்

World’s First Data Embassy

1.      உலகின் முதல் தரவுத் தூதரகம் - Estonia (எஸ்டோனியா) நாட்டில் தொடங்க பட்டது

United nation counter terrorism centre

1.      ஐக்கிய தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் - என்னும் புதிய மையம் - ஒன்று கூட்டப்பட்டுள்ளது  
2.     இதன் நோக்கம் - திவரவாதத்தை சிறப்பாக தடுப்பதாகும்
3.     இதன் தலைவராக - Vladimir Voronkov  நியமிக்கப்பட்டுள்ளார்

மற்றவை

1.      இந்தியாவில் முதன் முறையாக, வீட்டிலே டீசல் விநியோகிக்கும் முறை - பெங்களூரு வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
2.     பொருளாதார விவகார செயலாளர் ஆக - சுபாஷ் கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்
3.     உள்துறை செயலராக - Rajiv Gauba நியமிக்கப்பட்டுள்ளார்
4.     world Hydrology Day - ஜூன் 21
5.     Hope in a  Challenged Democracy - என்னும் புத்தகத்தை எழுதியவர் - அஸ்வினி குமார்June 25

நகர்ப்புற வாழ்வாதார குறியீடு

1.      மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், முதன் முறையாக நகர்ப்புற வாழ்வாதார குறியீடு முறையை அறிமுகப்படுத்தி உள்ளது
2.     இதன் படி - ஆந்திர மாநிலம் 96% பெற்று முதல் இடத்தில உள்ளது. 2. ஒதிஷா, 3. ஜார்கண்ட்

20து  ஷாங்காய் சர்வதேச திரைப்பட திருவிழா

1.      இந்த நிகழ்ச்சியில் - சல்மான் கான் நடித்த - சுல்தான் திரைப்படம் - சிறந்த action படம் ஆகா தேர்வுசெய்யப்பட்டுள்ளது
2.     இந்தியா திரைப்படம், இவ்விருதை பெறுவது இதுவே முதல் முறை ஆகும்

ஐ.நா வின் உயரிய பொது சேவை விருது

1.      ஐ.நா  சபையின் உயரிய பொதுசேவை விருதை - இந்த ஆண்டு வங்காள மாநிலத்திற்கு வழங்கப்பட்டது. வங்காள அரசு சார்பாக அதனை - அதன் முதல் அமைச்சர் மம்தா பானெர்ஜி பெற்றுக்கொண்டார்
2.     Kanyashree Prakalp - என்னும், குழந்தை திருமணம் மற்றும் அவர்களின் கல்விக்கான திட்டத்தை பாராட்டி, இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது

சாகித்ய அகாடமி விருது

1.      இந்த ஆண்டிற்கான - சாஹித்திய அகாடமி விருதான - “Bal Sahitya Puraskar (பால் சாஹித்திய புரஸ்கர்) விருது - Vincy Quadros என்பவருக்கு, அவரது Jaduche Petul என்ற புத்தகத்திற்காக வழங்கப்பட்டது
2.     மேலும் - Yuva Puraskar 2017 (யுவ புரஸ்கர்) விருது - Amey Naik என்பவருக்கு - அவரது “Mog Dot Comஎன்னும் கவிதை தொகுப்புக்காக வழங்கப்பட்டது
3.     இருவரும் கொங்கணி (Konkani) இலக்கிய பிரமுகர்கள் என்பது குறிப்பிடதக்கது
4.     சாஹித்திய அகாடமி - இந்தியாவின் உயரிய இலக்கிய அமைப்பாகும்
5.     இது தொடங்கப்பட்ட ஆண்டு - 1952
6.     மொத்தம் - 24 மொழிகள் (22 அங்கீகரிக்கப்பட்ட மொழி, மற்றும் ஆங்கிலம், ராஜஸ்தானி) மொழிகளில் வெளிவரும் இலக்கிய வேலைகளை பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது

உலகின் மிக பெரிய தொலைநோக்கி

1.      உலகின் மிக பெரிய தொலையாக்கியான - Thirty Meter Telescope (TMT), ஹவாய் நாட்டில் கட்டமைக்கப்பட்டு வருகிறது
2.     இதனை - இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, சீனா மற்றும் கனடா நாடுகள் சேர்ந்து தயாரித்துவருகிறது

மற்றவை

1.      இந்தியா வம்சாவளியை சேர்ந்த முதல் கனடா உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்? Palbinder Kaur
2.     கொடையாளருக்கு, வழங்கப்படும் உயரிய விருதானCarnegie Medal for Philantrophy’ விருது இந்த ஆண்டு யார்க்கு வழங்கப்பட்டது? அசிம் பிரேம்ஜி, WIPRO நிறுவனத்தின் நிறுவனர்
3.     ஆசியா விருது - இந்த ஆண்டு 2017 வழங்கப்பட்ட , 7வது ஆசியா விருதினை பெற்ற  முதல் இந்தியர் யார்? நிஷா தத், இவர் தொடங்கிய Intellecap என்னும் சமூக சேவை நிறுவனத்திற்காக வழங்கப்பட்டது
4.     போர்ச்சுகீஸ் நாட்டிற்கு, இருதரப்பு பயணமாக செல்லும் முதல் இந்திய பிரதமர் - நரேந்திர மோடி அவர்கள்
5.     கடலின் மழைக்காடுகள் என்றழைக்கப்படுவது - பவள பாறைகள்June 26

Gorkhaland மாநில அந்தஸ்த்து கோரிக்கை

1.      கூர்காலாந்து என்னும் இடம், மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கே உள்ள ஒரு சிறிய பகுதியாகும்
2.     இப்பகுதி மக்கள் - கூர்க்கா இனத்தை சேர்ந்த நேபால் மற்றும் இந்திய வலி மக்கள் ஆவர்
3.     இவர்களுக்கும், மேற்கு வங்காள மாநில மக்களுக்கும் மொழி மற்றும் கலாச்சார வேறுபாடு உள்ளது
4.     இதன் அடிப்படையில் - தனி மாநிலம் கேட்டு கூர்காலாந்து மக்கள் வெகுகாலமாக போராடி வருகின்றனர்
5.     இப்பொழுது மேலும் இந்த கோரிக்கை வலுத்துள்ளது
6.     மத்திய அரசு, - இந்த பகுதி தன்னிச்சையாக செயல்பட நிர்வாக வசதி போதுமான அளவு இல்லாத காரணத்தால் இந்த கோரிக்கையை மறுத்து வருகிறது

மணிப்பூர் அரசு

1.      மணிப்பூர் அரசு, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி உடனடியாக புகார் தெரிவிக்க 24 * 7 இலவச தோலை பேசி என்னை அறிமுக படுத்தியுள்ளது.
2.     தொலைபேசி என் - 181

பாரிஸ் ஒப்பந்தம்

1.      பாரிஸ் ஒப்பந்தம் - காலநிலை மாற்றம் பற்றிய ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாட்டின் கீழ் வரும் ஒரு ஒப்பந்தம் ஆகும்
2.     இதன் நோக்கம் - பசுமை இல்ல வாய்வுகளான - Carbon dioxide, Methane, Hydrofluoro carbons, Nitrous oxide, Cholorofluoro carbons, போன்ற வாய்வுகளை கட்டுப்படுத்தி பூமி வெப்பமயமாகுதலை தடுப்பதாகும்
3.     தற்போது - UNESCO தனது அறிக்கையில் அழிந்து வரும் பவள பாறையை காப்பாற்ற - பாரிஸ் ஒப்பந்தத்தில், முடிவெடுக்கப்பட்டுள்ள படி - தொழிவளர்ச்சிக்கு முந்தைய காலா வெப்பநிலையை விட 1.5 C குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது

மாநில நிதி பற்றாக்குறை

1.      ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை - “Handbook of Statistics on state 2016-17” ம் படி, இந்திய மாநிலங்களின் மொத்த நிதி பற்றாக்குறை - 4,93,360 கோடியாக உள்ளது
2.     அதிக நீதி பற்றாக்குறையுடன் - ராஜஸ்தான் மாநிலம் 67,350 கோடி, இரண்டாவது உத்தரப்பிரதேஷம், 3 - மகாராஷ்டிரா மாநிலம்

கிடாம்பி ஸ்ரீகாந்த்

1.      கிடாம்பி ஸ்ரீகாந்த் - பேட்மிட்டன் ஆடவர் ஒற்றை பிரிவில், ஆஸ்திரேலியா ஓபன் சூப்பர் தொடர் தலைப்பை வென்றுள்ளார்
2.     இந்த ஆண்டு இவர், சிங்கப்பூ ஓபன் தொடர் மற்றும் இந்தோனேஷியா ஓபன் தொடர் தலைப்பையும் வென்றுள்ளார்

புத்தகம்

1.      “The Emergency - Indian Democracy’s Darkest Hour” - என்னும் புத்தகத்தை - வெங்கையா நாயுடு அவர்கள் வெளிட்டார்
2.     இதன் ஆசிரியர் - சூர்யா பிரகாஷ் ; பிரசாத் பாரதி தொலைகாதசி தலைவர்

Anti-Emergency Day

1.      மத்திய அரசி 25-26 ஜூன் மாதம், அவரசர்கால எதிரிப்பு தினமாக கடைபிடிக்க முடிவுசெய்துள்ளது
2.     1975 ம் ஆண்டு இந்திரா காந்தி அவர்கள், பிரதமராக இருந்த பொது - ஜூன் 25 அன்று அவசரகால கொண்டு வரப்பட்டது. இதனை ஜநாயகத்தின் கருப்பு தினமாக அனுசரிக்க படுகிறது
3.     25 ஜூன் 1975 முதல் 21 மார்ச் 1977 வரை 21 மாதங்கள் அவரசரகால சட்டம் நீடித்தது.
4.     உள்நாட்டு கிளர்ச்சி - article 352, மூலம் - அவசரகால தடை சட்டம் கொண்டுவரப்பட்டது
5.     அப்பொழுது - Fakruddin ali ahmed அவர்கள் ஜனாதிபதியாக இருந்தார்

கப்பற் பிரியாணி தினம்

1.      ஜூன் 25ம் நாள் - கப்பற் பிரியாணி தினமாக கொண்டாடப்படுகிறது


மற்றவை

1.      பூரி ஜெகநாத் கோவில் எங்குள்ளது? ஒதிஷா மாநிலம்


June 27

National Education Policy

1.      தேசிய கல்வி கொள்கை 1968 ம் ஆண்டு இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது - கல்வியை ஊக்கவிக்க  அறிமுகப்படுத்தப்பட்டது
2.     இரண்டாம் தேசிய கல்வி கொள்கை 1986 ம் ஆண்டு ராஜிவ் காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. மேலும் அது 1992 ம் ஆண்டு திருத்தும் செய்யப்பட்டது
3.     தற்போது, இந்த ஆண்டு புதிய தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டுவர உள்ளது  
4.     இதற்க்கு - முன்னாள் ISRO தலைவரும், விஞ்ஞானியும் ஆனா             K. Kasturirangan (கஸ்துரிரங்கன்) தலைமையில் தேசிய கல்வி கொள்கை குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளதுAir Ambulance

1.      கோவையில் உள்ள, Ganga Hospital (கங்கா மருத்துவமனை ) Air Ambulance சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
2.     ஒரு தனியார் மருத்துவமனை, சுயமாக தனது Air Ambulance சேவை வழங்குவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்

Sahayak System (சஹாயக் முறை )

1.      இந்த முறை, பிரிட்டிஷ் ஆண்ட பொழுது, ராணுவ அதிகாரிகளுக்கு அவர்களது தனிப்பட்ட வேலைகளை கவனித்து கொள்ள கொண்டுவரப்பட்ட முறை.
2.     இது தற்போது வரை கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இதில் ராணுவ வீரர்களையே பயன்படுத்துவர். தற்போது இளம் ராணுவ வீரர்களிடையே இம்முறைக்கு எதிர்ப்பு வலுத்துள்ளதால், ராணுவம் இந்த வேலைகளுக்கு ராணுவ வீரர்களுக்கு பதிலாக வெளியாட்களை பயன்படுத்த முடிவு செய்ந்துள்ளது

அருணாச்சல பிரதேஷ்

1.      அருணாச்சல பிரதேஷம் முதல் அமைச்சர் PemaKhandu (பீமா கண்டு) அவர்கள், அம் மாநில அரசு அதிகாரிகளின் ஓய்வு வயதினை 60 ஆகா உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளார்

MODI Fest

1.      கோவா மாநில அரசு MODI Fest (Making Of Developed India Fest) என்னும் நிகழ்ச்சியை நடத்த முடிவுசெய்துள்ளது
2.     இதன் நோக்கம் - மூன்றான்டு மத்திய அரசு சாதனையை மக்களிடம் எடுத்துச்செல்வது ஆகும்
3.     கோவா மாநிலத்தின் முதல் அமைச்சர் - மனோகர் பரிகார்
உலக வங்கி

1.      உலக வங்கி, இந்திய  மக்களின் திறமையை மேன்படுத்த, Skill India Mission Operation கீழ் சுமார் 1,600 கோடி ரூபாய் உதவி தொகை அறிவித்துள்ளது
2.     Skill India திட்டம் - 15 ஜூலை 2015 ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அறிவிக்கபட்டது
3.     இதன் நோக்கம் - 2022 ம் ஆண்டிற்குள் 40 கோடி மக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதாகும்

Miss India

1.      Manushi Chhillar (மனுஷி சஹில்லர்) Miss India தலைப்பை வென்றுள்ளார். இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்
2.     பூமிகா சர்மா என்பவர் - Bodybuilding போட்டியில், உலக அழகி தலைப்பை வென்றுள்ளார்

Mars Rover

1.      NASA அனுப்பிய Opportunity Mars Rover, செவ்வாய் கிரகத்தில் நீர் முன்பு இருந்ததிற்க்கான தடைகளை கண்டறிந்துள்ளது
2.     Curiosity (Rover) ரோபோட் - 2012 ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு சென்றடைந்தது

விளையாட்டு

1.      உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஏர் பிஸ்டல் - 10 m  பிரிவில் - இந்தியாவை சேர்ந்த யஹஸ்வினி தேஸ்வால் என்பவர் தங்க பதக்கம் வென்றுள்ளார்

ISRO தொழிநுட்பம்

1.      ஆள் இல்லா, ரயில்வேவை கடக்கும் இடங்களில் - சாலை பயணிகளை  எச்சரிக்கும் வகையில் இந்தியன் ரயில்வே, ISRO உடல் இணைத்து IC (integrated chip) ஒன்றை தயாரிக்கவுள்ளது.
2.     இதன் மூலம் - விபத்துகளை தவிர்க்கமுடியும்

மற்றவை

1.      அமெரிக்காவில் நடைபெற்ற, RAAC (Race Across America) போட்டியில் வென்ற முதல் இந்தியர்? ஸ்ரீனிவாஸ் கோகுல்நாத். இவர் இந்தியா ராணுவ மருத்துவர் ஆவர். இப்போட்டி அமெரிக்காவில் சைக்கிள் இல் கடப்பதுமாகும். பந்தய தூரம் 4900 km
June 28

UN MSME day
UN, Micro, Small and Medium Enterprises (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவங்களின்) பங்களிப்பை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு முதல் ஜூன் 27 ம் தேதியை UN, MSME Day ((குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவங்கள்) தினமாக அறிவித்துள்ளது

            இதனை கொண்டாடும் வகையில் , மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவன துறை அமைச்சர், Digital MSME என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

Skill India Campaign
            Priyanka Chopra வை மத்திய அரசு, Skill India திட்டத்திற்கு, பிரதிநிதியாக அறிவித்துள்ளது

பால் கலப்படம்
            தமிழக பால் வள துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள், பாலில் கலப்படம் செய்படுவதாக புகார் தெரிவித்துள்ளார்.

            இந்த பால்களில், பால் காலாவதி ஆவதை தடுப்பதற்கு - Hydrogen peroxide, Potassium Hydroxide, Sodium Hydroxide (Caustic Soda), ammonium sulphate போன்ற வேதிய பொருட்கள் கலக்கப்படுகிறது

            Hydrogen peroxide - H2O2 (Bleaching Agent) போன்ற வேதிய பொருட்கள் - கிருமிநாசினியாக பயன்படுகிறது. இதனை பாலில் கலக்கும் பொழுது, பாலில் உள்ள பாக்டீரியாவை அளித்து, பால் நீண்ட நாள் கெடாமல் இருக்க உதவுகிறது. அனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் கலப்படம் செய்யும் பொழுது - அவை புற்றுநோய் போன்ற நோய்களை உருவாக்குகிறது.

            Sodium Hydroxide (Caustic Soda) - NaOH - சோப்பு தயாரிப்பில் இதனை அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதனை, பாலுடன் கலக்கும் பொழுது, பாலில் சேர்க்க படும் நீரின் அடர்த்தியை அதிகரித்து, சுத்தமா கலப்படம் அற்ற பால் போல் தோற்றம் ஏற்படுத்துகிறது

தற்போது உணவு கலப்படம் செய்வதை  - Food Safety and Standard Act, 2006 ன் கீழ் உருவாக்க பட்ட FSSAI  - இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு, கண்காணித்து  வருகிறது.

நிதி ஆண்டு
            மத்திய அரசு வரும் 2018 ம் ஆண்டு முதல் - நிதி ஆண்டை ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மாற்ற முடிவு செய்துள்ளது . அப்பொழுது நவம்பர் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இது நிர்வாகத்தை எளிமையாக்கும் என்று கருதப்படுகிறது.

            தற்போது, ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தை நிதி ஆண்டாக கொண்டு செயல்பட்டுவருகிறது. பட்ஜெட் பிப்ரவரி மாதம் கடைசி நாள் அன்று மக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டுவருகிறது.

மற்றவை
1.      இந்தியா, உலக Throw Ball போட்டியில் முதன் முறையாக தங்க பதக்கம் வென்றுள்ளது. இந்தியா இப்போட்டியில் கலந்து கொள்வதும் இதுவே முதல் முறையாகும்
2.     சர்வதேச குத்துசண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்? அங்குஷ் தையா
3.     ATM Automated Teller Machine (Cash Machine) அறிமுகப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை கண்டுபிடித்தவர்? ஸ்காட்டிஷை சேர்ந்த ஷெப்பர்ட் பரோன் ஆவர்
4.     சர்வதேச பொருளாதார சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? கௌஷிக் பாஸு
5.     US, Human Trafficking Report படி, மனித கடத்தலில் மிக மோசமா நாடுகள் எவை? சீனா, சிரியா, ஜிம்பாபேJune 29

Blood Bank for Cattle

1.      இந்தியாவின் முதல், கால்நடைகளுக்கான ரத்த வங்கி, ஒடிஷா மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது
2.     இந்தியா ரத்த வங்கி, ஒடிஷா வேளாண் பல்கலைக்கழகம் கீழ் செயல்படும்

Election Commission tie-up with Facebook

1.      இந்தியா தேர்தல் ஆணையம், Facebook நிறுவனத்தோடு இணைந்து - Voter Registration Reminder - சேவையை வழங்கவுள்ளது
2.     இதன் மூலம் - 18 வயது நிறைவடைத்தவர்களுக்கு - வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய - நினைவூட்டப்படும்
3.     தற்போதைய தேர்தல் ஆணையர் - நஜிம் சய்தி

Social Progress Index 2017

1.      Deloitte நிறுவனத்தோடு இணைந்து SPI நடத்திய ஆய்வில், இந்தியா சமூக முன்னேற்ற குறியீட்டில் - 128 நாடுகளில் 93 வது இடத்தில உள்ளது
2.     முதல் இடம் - டென்மார்க் ; 2. பின்லாந்து ; 3. Iceland

World Book Capital 2019

1.      UNESCO - United Nation Educational, Scientific and Cultural Organisation - 2019 ம் ஆண்டின் புத்தக தலைநரகமாக - Sharjah (ஷார்ஜாஹ்) வை அறிவித்துள்ளது
2.     UNESCO தொடங்கப்பட்ட ஆண்டு - 16 நவம்பர் 1945
3.     தலைமையகம் - பாரிஸ் பிரான்ஸ்

Draft Regulation  for Organic food products

1.      வளர்ந்து வரும், இயற்கை உணவு சந்தையை முறைப்படுத்தும் வகையிலும் அதன் நம்பக தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் - உணவு பாதுகாப்பு மற்றும் நியமன ஆணையம் - புதிய கட்டுப்பாடு கொண்டுவந்துள்ளது
2.     அதன் படி - NPOP (National Program for Organic Production) விதிகளில் குறிப்பிட்டவாறு - உணவின் தரம் அதை பற்றிய முழு விவரத்தையும் அதில் பதிவிடுதல் வேண்டும்
3.     மேலும் அவை இயற்கை கரிம  உணவு என்பதற்கான உரிய சான்றிதழையும் அதில் அச்சிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

National Pharmaceutical Pricing authority

1.      தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் - தேசிய மருந்துகள் விலை நிர்ணய சட்டப்படி 1997 ம் ஆண்டு அமைக்கப்பட்டது
2.     இதன் நோக்கம் - அத்யாவசிய மருந்துகளின் விலையை கட்டுக்குள் வைப்பதாகும்
3.     தற்போது இந்த ஆணையம் - 761 அத்யாவசிய மருந்துகளின் விலையை நிர்ணயம் செய்துவருகிறது
4.     இந்த ஆணையம் - மத்திய ரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது

Global Skill Development Summit

1.      2வது உலக திறன் மேம்பட்டு உச்சிமாநாடு - பிரான்ஸ் பாரிஸ் நகரில் நடைபெறுகிறது
2.     இதில் உத்தரகாண்ட மாநிலம் - சிறந்த முறையில் தகவல் தொழிநுட்பத்தை பயன்ப்படுத்தி, அம்மாநிலத்திம் இளைஞர்களின் திறனை மேம்பட செய்ததிற்கு award of excellence - விருது வழங்கப்பட்டது

FIFA U-17 World Cup Match

1.      FIFA  -17 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் , உலக கோப்பாய் போட்டிகளில் இந்தியா பங்கேற்கும் போட்டியை தலைநகர் டெல்லியில் நடத்த முடிவு செய்துள்ளது

Rajeev Sukhla Committee

1.      BCCI - BCCI கட்டமைப்பு சீர்திருத்தத்திற்க்காக,  உச்ச நீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட லோதா குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற புதிய குழு ஒன்றை அமைத்துள்ளது
2.     7 நபர் கொண்ட இந்த குழு - ராஜீவ் சுக்ஹல தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது

Ransomware

1.      Petya Ransomware - இந்தியாவின் மிக பெரிய துறைமுகமான - ஜவாஹர்லால் நேரு துறைமுக கணினிகளை தாக்கியுள்ளது
2.     மேலும் இதன் ransomware ஐரோப் மற்றும் ரஷ்யா நாடுகளை பெரும் அளவில் தாக்கியுள்ளது
3.     இதற்கு முன் - wannacry or wcry என்ற ransomware உலகம் முழுவதும் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை செய்தவர்கள் தங்களை shadow brokers என்று குறிப்பிட்டுருந்தனர்
4.     Ransomware is a type of malicious software designed to block access to a computer system until a sum of money is paid.


No comments:

Post a Comment