Monday, 9 October 2017

TNPSC Current affairs July Part 1


TNPSC Current affairs in Tamil

July 1 – July 10 Current affairs – compilation PDF

1.      UN Tax Fund - (UN வரி நிதிக்கு) முதல் பங்களிப்பு அளித்த நாடு? இந்தியா, $1,00,000 நிதி வழங்கியுள்ளது
2.     வடகிழக்கு மாநிலங்கலில், பொது சேவை வழங்குவதற்கு மத்திய அமைச்சன் அறிவித்துள்ள ‘COMMIT” என்னும் புதிய திட்டத்தின் விரிவாக்கம்? Comprehensive Online Modified Modules on Induction Training
3.     மத்திய அமைச்சகம் - எந்த நாட்டுடன் இணைந்து, தேசிய நீர் பாதுகாப்பு தொழிநுட்பத்தை மேம்படுத்த உள்ளது ? இஸ்ரேல்
4.    US- India தொழிலதிபர் மாநாட்டில் , உலகின் சிறந்த தொழிலதிபர் விருதினை பெற்றவர் - ஆதி கோத்ரெஜ்
5.     ISRO, பிரெஞ்சு கயானா வில் இருந்து, Arianne -5 ராக்கெட் மூலம் எந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது? GSAT 17; இது தகவல் தொடர்பு செயற்கைகோள் ஆகும்
6.     மத்திய அரசு, எந்த பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து, தனது பங்குகளை திரும்பப்பெற (Disinvestment) ஒப்புதல் வழங்கியுள்ளது? Air India நிறுவனம்
7.     Petya ransomware - இந்தியாவின் மிக பெரிய துறைமுகத்தை தாக்கியது. அந்த துறைமுகத்தின் எது? ஜவாஹர்லால் நேரு துறைமுகம், மும்பை
8.    உலகின் முதல் - வன நகரங்களை (Forest Cities) உருவாக்கி வரும் நாடு ? சீனா
9.     ஒரிசா வேளாண்மை பல்கலை கழகம் புதிய கோடை வகை பயிர் ஒன்றைஉருவாகியுள்ளது. அது என்ன பயிர்? நிலக்கடலை
10.National Statistics day என்று கொண்டாடப்படுகிறது? ஜூன் 29 , இது prof. மஹலனோபிஸ் அவர்களின் பிறந்தநாள்
11.  International Day for Tropics என்று கடைபிடிக்கப்படுகிறது? ஜூன் 29
12. Nathu la கணவாய் எங்குள்ளது - சிக்கிம், இது சீனா திபெத் பகுதியையும் இந்தியாவையும் இணைகிறது. பழைய பட்டு பாதை இவளை செல்லும் (old silk route)
13. US - எந்த அதிநவீன சுமை தூக்கி விமானத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்யவுள்ளது? C - 17 Global Master
14. இந்தியாவின் புதிய அரசு வழக்கறிஞர் (Attorney General of India) ஆகா நியமிக்கப்பட்டவர்? K K வேணுகோபால்
15. 2017 ம் ஆண்டின் உலகின் சிறந்த ஜோதிடர் என்ற விருதை பெற்றவர்? T S வினீத் பத்
16. தேசிய  மருத்துவர் தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜூலை 1
17. யாருடைய பிறந்தநாளை தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது? Dr. பிதான் சந்திரா ராய். இவர் மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல் அமைச்சரும் ஆவர்
18. உலக கூட்டுறவு சங்க தினம் என்று கொண்டாடபப்படுகிறது ? ஜூலை மத முதல் சனிக்கிழமை அன்று . இந்த ஆண்டு ஜூலை 1
19. UNESCO எந்த நகரை, உலக புத்தக தலைநகரமாக 2017 ம் ஆண்டு அறிவித்துள்ளது? ஷார்ஜா, ஐக்கிய அரபு நாடுகள்
20.                       இங்கிலாந்து பிரதமர், தெரசா மே எந்த கட்சியை சேர்ந்தவர்? Conservative Party
21. Attorney General of India,(இந்திய அரசு பொது வழக்கறிஞர்)  வை நியமிப்பது யார்? ஜனாதிபதி, article – 76
22.                        எந்த ஐரோப்பிய நாடு பாராளுமன்றம் ஓரின திருமணத்திற்கு சம்பிப்பதில் ஒப்புதல் வழங்கியுள்ளது? ஜெர்மனி

Questions

1.      இந்தியாவின் மிக பெரிய நன்னீர் நீர்வாழ் கட்சிசாலை (Aquarium) எங்கு திறக்கப்பட்டது ? ரஞ்சி, ஜார்கண்ட்
2.     GST Day இந்த ஆண்டு முதல் என்று கடைபிடிக்கப்படும் ? ஜூலை 1,
3.     RBI வெளியிட்ட, நிதி ஸ்திரத்தன்மை அறிக்கை படி, இந்தியாவின் வளர்ச்சி மொத பாதிப்பு சேர்க்கை படி எவ்வளவு? 7.3%
4.     National Biopharmaceutical Mission - எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்ப்படுகிறது? மத்திய அறிவியல் மற்றும் தொழிநுட்ப அமைச்சகம். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் - ஜூன் 30 2017
5.     இந்தியாவின் எட்டு முக்கிய தொழிதுறைகள் எவை ( 8 Core Industries) - நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு தயாரிப்புகள், உரங்கள், உருக்கு ஆளை, சிமெண்ட், மின்சாரம் ஆகும்
6.     8 முக்கிய தொழிற்சாலைகளில், எந்த துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? மின்சாரம்
7.      சுபத்ரா பட்சாரிய  எந்த விளையாட்டு துறை வீரர்? கால்ப்பந்து
8.     இந்திய - திபெத்திய எல்லை பாதுகாப்பு படையின், இயக்குனராக நியமிக்கப்பட்டவர்? P K Pachnanda
9.     சர்வதேச கூட்டுறவுத்துறை தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜூலை முதல் சனிக்கிழமை
10. எந்த மாநில அரசு, வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது ? தெலுங்கானா அரசு
11.   Core Banking Solution எனப்படுவது - அணைத்து வங்கி கிளைகளையும் ஒன்றோடு ஒன்றை இணைத்து, அணைத்து கிளையிலும், வாடிக்கையாளருக்கு வங்கி சேவை அளிப்பதாகும்
12. Textile India 2017 - மெகா ஜவுளி வர்த்தக கண்காட்சி எங்கு நடைபெற்றது? காந்திநகர் குஜராத்
13. இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர்? அச்சல் குமார் ஜோதி (Achal Kumar Jyoti), 21து தலைமை தேர்தல் ஆணையர்
14. உலக விளையாட்டு பத்திரிகையாளர் தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜூலை 2
15. ஒரு நாள் கிரிக்கெட் விளையாட்டில் அதிக sixer அடித்த கேப்டன்? MS தோனி
16. Spectrometer கருவி எதனை அளக்க பயன்படுகிறது ? கதிரியக்கத்தின் தீவிரத்தை அளவிடுதல் (to measure the radiation intensity as a function of wave length)
17.  Spectroscopy - எனப்படுவது? பொருள் மற்றும் மின்காந்த கதிர்வீச்சிற்கும் இடையிலான தொடர்பு பற்றிய ஆய்வாகும்  
18. உலகின் மிக துல்லியமான லேசர் கதிரை, ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாய்க்குள்ளனர். துல்லியமான லேசர் கதிர் எவ்வளவு அதிர்வெண் உடையதாக இருக்கும்? 10 Mhz

Questions – part 3

1.      தமிழக அரசு - மகளிர் சுய உதவி குழுவிற்கு, கடன் தொகை இந்த ஆண்டு எவ்வளவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது? 7000 கோடி
2.     21வது தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கவுள்ளவர்? அச்சல் குமார் ஜோதி
3.     இந்தியாவின் மிக பெரிய திறன் மேன்பாட்டு பூங்கா (Global Skill Park) எங்கு வரவுள்ளது? போபால். மத்திய பிரதேஷ்
4.     எந்த மாநில அரசு, வேளாண்மைக்கு என தனி நிதி அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது? தெலுங்கானா
5.     6 கோடி மர கன்றுகளை நட்டு, புதிய சாதனை படைத்த மாநிலம்? மத்திய பிரதேஷ், இதன் முதல்வர் - ஷிவ்ராஜ் சிங்க் சவுஹான்
6.     G-ride - என்னும் சவாரி பகிர்வு செயலியை எந்த மாநில முதல் அமைச்சர் அறிமுகப்படுத்தினார்? கேரளா, பின்னராயி விஜயன். இது தகவல் தொழிநுட்பத்துறையில் பணிபுரிபவர்க்கு என பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டவை
7.      உலகின் பழமையான அவசர என் - 999 அறிமுகப்படுத்தப்பட்டு 80 ஆண்டுகள் ஆகிறது. 999 எந்த நாட்டின் அவசர என்? இங்கிலாந்து
8.     UPI ன் விரிவாக்கம் - United Payment Interface , இது ஆகஸ்ட் 2016 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது
9.     BHIM ன் விரிவாக்கம் - Bharat Money Interface
10. கஜிரங்கா தேசிய பூங்கா எங்குள்ளது - அசாம். பிரம்மபுத்ரா நதி இதன் குறுக்கே செல்கிறது
11.   FIA Formula 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற முதல் இந்தியர்? Jehan Daruvala
12. சர்வதேச பிளாஸ்டிக் பை அற்ற தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது? ஜூலை 3
13. HELP - மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ள HELP திட்டத்தின் விரிவாக்கம் - Hydrocarbon Exploration and Licensing Policy - இது NELP New exploration and licensing policy 1998 ய்  மாற்றம் செய்யும்


Questions

1.      Ex - Maitree (Ex - மைத்திரி) என்னும் ராணுவ கூட்டு பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையில் நடைபெற்றது? தாய்லாந்து. ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் நடைபெற்றது
2.     Doklam (டோக்லாம்) பகுதியில் சீனா சாலை அமைத்துவருவது, இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவை பதித்துவருகிறது. இந்த பகுதி மூன்று நாட்டின் மும்முனையில் அமைத்துள்ளது. அந்த நாடுகள் எது? இந்தியா  சீனா - பூட்டான்
3.     2014 ம் ஆண்டிற்கு பின், swiss வங்கியில், இந்தியர்களின் பண இருப்பு கணிசமாக குறைந்துள்ளது. தற்போது அவ்வங்கியின் அறிக்கை படி, இந்தியர்கள் எவ்ளவு பணம் அவ்வங்கி கணக்கில் கொண்டுள்ளனர்? 4500 கோடி ரூபாய். இந்தியா 88 வது இடத்தில உள்ளது
4.     Elevate 100 திட்டம் எந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியவைத்தது? கர்நாடகா. இது துவக்க நிலை தொழில் முனைவோரை  கண்டறிந்து, அவர்கள் வளர்ச்சிக்கு உதவுவதாகும்
5.     21வந்து சட்ட கமிஷன் தலைவர் யார்? நீதிபதி பல்பிர் சிவராஜ் சவுகான்
6.     பிரதமர் மோடி இஸ்ரேல்க்கு செல்லும் முதல் இந்தியா பிரதமர் ஆவர். இஸ்ரேல் ன் தலைநகரம் எது? ஜெருசலேம். தற்போதைய பிரதமர் - பெஞ்சமின் நெட்டன்யாஹு
7.      Dree (த்ரீ) திருவிழா எங்கு கொண்டாட படுகிறது? அருணாச்சல பிரதேஷ். இது வேளாண்மை திருவிழா ஆகும்
8.     5 வது BRICS Education Minister Meeting (கல்வி அமைச்சர் மாநாடு) எங்கு நடைபெற்றது? பெய்ஜிங் சீனா
9.     Delhi-Dialogue - 9வது டெல்லி உரையாடல் - ASEAN நாடுகள் மற்றும் இந்தியாவிற்கு இடையே புது டெல்லியில் நடைபெற்றது. இது சமூக பொருளாதார அரசியல் உரையாடல் சந்திப்பாகும்
10. TCS நிறுவனத்தின் தலைவர்? N சந்திரசேகரன், இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்
11.   MERIT app (செயலியை) எந்த மத்திய அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது? மத்திய மின்சார அமைச்சகம். இத நோக்கம் குறைந்தவிலை மின்சார கொள்முதல் ஆகும்
12. UDAY திட்டத்தின் விரிவாக்கம் - Ujjawala DISCOM Assurance Yojana ஆகும்.  இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து மின்சார விநியோக நிறுவனத்தையம் இணைப்பதுமாகும். மேலும் மாநில மின்சார விநியோக நிறுவங்களின் கடன் சுமையை குறைப்பதாகும் 
13. 22 வது ஏசியன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெறுகிறது? புவனேஸ்வர், ஒதிஷா
14. எந்த நட்டு அணி, 2017 ஏசியன் ஸ்னூக்கர் அணி சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றது ? இந்தியா. இறுதி போட்டியில் பாக்கிஸ்தான் அணியை வீழ்த்தியது
15. தலைமை தேர்தல் ஆணையரின் பதவி காலம்? 6 வருடம் அல்லது 65 வயது நிறைவு வரை
16. 12வது G-20 மாநாடு எங்கு நடைபெறுகிறது? ஹாம்பர்க் நகர், ஜெர்மனி
17.  7வது BRICS சுகாதார அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெறுகிறது? பெய்ஜிங், சீனா
18. எந்த நாடு, பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, அந்நாட்டின் ஒருவகை (Crysanthumun) மலருக்கு மோடி என்று பெயர் வைத்துள்ளது? இஸ்ரேல்
19. GST மசோதாவை, கடைசியாக நிறைவேற்றிய மாநிலம்? ஜம்மு காஷ்மீர்
20.         GST மசோதாவை முதலில் நிறைவேற்றிய மாநிலம் ? அசாம் , 2. பீகார்
21. H5N1 என்பது? அதிக  நோய்த்தொற்று பரப்பக்கூடிய பறவை காச்சல் ஆகும். மிக சில நேரத்தில் மனிதருக்கும் பரவம். இது ஒரு சுவாச நோய்
22.FIFA - உலக தரவரிசை பட்டியலில் இந்தியா எந்த இடத்தில உள்ளது? 96
23.மான்ப்ரீத் கவுர், எந்த விளையாட்டை சேர்ந்தவர் ? குண்டு எறிதல், இவர் ஏசியன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்
24.          தமிழ்நாடு திரையரங்கு கு எத்தனை சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது ? 30%, GST 28%
25.IIOT ன் விரிவாக்கம் - Industrial internet of things

Questions – part 4

1.      RBI தொடங்கப்பட்ட ஆண்டு - 1 ஏப்ரல் 1935
2.     RBI தலைமையகம் எங்குள்ளது - மும்பை, மகாராஷ்டிரா. கவர்னர் - உர்ஜிட் படேல்
3.     ஏசியன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 5000 m ஓட்ட பந்தியத்தில் தன்கண் வென்றவர்? கோவிந்தன் லட்சுமண், இவர் தமிழகத்தை சேர்ந்தவர்
4.     இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் - தலித் மாணவர்க்கு என பிரத்யேகமாக எங்கு தொடங்கப்படவுள்ளது? ஹைதெராபாத். தெலங்கானா அரசு இதனை தொடங்கவுள்ளது

1.      GST Rate Finder App - இது பொருட்களின் GST வரியை பற்றி வாடிக்கையாளர் தெரிந்துகொள்ள, மத்திய நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்திய செயலி ஆகும்
2.     வாஷிங்டன் பல்கலைக்கழகம் - பேட்டரி இல்லாமல் இயங்கும் கைபேசியை வடிவமைத்துள்ளது. இதன் சக்தி மூலம்? ரேடியோ சிக்னல் அல்லது ஒளி
3.     WHO - உலக சுகாதார அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு? 7 ஏப்ரல் 1948, தலைமையகம் - ஜெனீவா சுவிற்சர்லாந்து
4.     Oracle நிறுவனம் தனது முதல் Digital Hub இங்குதொடங்கியது? பெங்களூரு
5.     National Intellectual Property Rights Policy - அறிமுகப்படுத்த பட்ட ஆண்டு - 2016
6.     Copyright act - (பதிப்புரிமை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1957; 2012 ம் ஆண்டு திருத்தும் செய்யப்பட்டது
7.      இந்தியாவில் அதிக மண் சுகாதார அட்டை (Soil Health Card) வழங்கிய மாநிலம்? சட்டிஸ்கர்
8.     Right to education act - சட்டம் செயல்பாட்டிற்கு வந்த நாள் - 1 ஏப்ரல் 2010; நாடுளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் - 2009 ஆகஸ்ட் 4
9.     RTE  ஆக்ட் 2010 - எந்த சரத்து ன் கீழ் வருகிறது - சரத்து 21a
10. TSR சுப்ரமணிய குழு - அனைவரும் கட்டாய தேர்ச்சி பற்றிய குழு - இது 5 ம் வாகுவரை மட்டுமே - அனைவரும் கட்டாய தேர்ச்சி முறை இருக்கவேண்டும் என்றும் அதற்க்கு மேல் - தேர்வு தான் தீர்மானிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது
11.   வாசுதேவ் தேவ்நானி குழுவும் இதையெர் பரிந்துரைத்தது
12. Beijing Protocol (பெய்ஜிங் நெறிமுறை) - இதன் படி விமான கடத்தல் எதிர்ப்பு சட்டம் கொடுவரப்பட்டது
13. WINGS-2017 என்றழைக்கப்படும் முதல் விமான பிராந்திய இணைப்பு மாநாடு எங்கு நடைபெற்றது? புது டெல்லி
14. ASEAN கூட்டமைப்பு துவக்கப்படட்ட ஆண்டு - 8 ஆகஸ்ட் 1967
15. முதல் சர்வதேச விமான பாதுகாப்பு கருத்தரங்கம் எங்கு நடைபெற்றது? ஹரியானா
16. வியட்நாம் அரசு, எந்த இந்தியா நிறுவனத்திற்கு - தனது கடற்பகுதியில் இருந்து எண்ணெய் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது ? ONGC
17.  சர்வதேச விளையாட்டு மாநாடு - “CII Score Card 2017” எங்கு நடைபெற்றது? புது டெல்லி


National
Textile India

1.      சபர்மதி ஆஷ்ரமத்தின் 100 வருட  விழாவை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் - Textile India  - என்னும் வர்த்தக கண்டகாட்சியை, காந்திநகர் குஜராத்தில் துவக்கிவைத்தார்

Quick Reaction Surface to Air Missile
இந்தியா ராணுவம் வெற்றிகரமாக உள்நாட்டில் தயாரிக்க பட்ட - Quick Reaction Surface to Air ஏவுகணையை சோதனை செய்தது
இதன் தாக்கும் வரம்பு - 25 முதல் 30 km ஆகும்

Special Rhino Protection Force

அசாம் மாநில அரசு, காண்டாமிருகங்களை பாதுகாக்க  சிறப்பு காண்டமிருக பாதுகாப்பு படை ஒன்றை உருவாக்கி உள்ளது
இந்திய காண்டாமிருகங்கள் - IUCN பட்டியலில் பாதுகாக்க படவேண்டிய (Vulnerable list ) மிருக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது
இவை - ஒற்றை கொம்பு காண்டாமிருகம் - , அசாம், பூட்டான், நேபால் மற்றும் பாக்கிஸ்தான் பகுதிகளில் காணப்படுகின்றன

Law Commission Report

21வது சட்ட குழு, Compulsory Registration of Marriages என்னும் தலைப்பின் புதிய பரிந்துரை ஒன்றை சமர்ப்பித்துள்ளது
இது அணைத்து திருமணத்தையும் பதிவு செய்யும் பரிந்துரை ஆகும். இதன் நோக்கம் - இதன் மூலம் குழந்தை திருமணம், மனைவியை கைவிடுதல், பாலை வன் கொடுமை, திருமண மோசடி போன்றவற்றை தடுப்பதாகும்
மேலும் இந்த அறிக்கையில் 30 நாட்களுக்குள், திருமணத்தை பதிவு செய்யவேண்டும் என்றும், தவறினால் நாள் ஒன்றுக்கு 5 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று பரிந்துரைக்க பட்டுள்ளது
21வது சட்ட குழுவின் தலைவர் - நீதிபதி பல்பிர் சிவராஜ் சவுகான் ஆவர்
மூன்று  ஆண்டுக்கு ஒருமுறை சட்டக்குழு அமைக்கப்படும்.
முதல் சட்ட குழு 1955 ம் ஆண்டு அமைக்க பட்டது. சுதந்திரத்துக்கு முன் 1934 ம் ஆண்டு அமைக்கப்பட்டது

Van Mahotsava (வான் மஹோத்சவ)

இது மர கன்று நடும் திருவிழா ஆகும் .
இது நாடு முழுவது 1950 ம் ஆண்டு முதல் கடைபிடிக்க பட்டு வருகிறது
ஜூலை முதல் வாரம் இது கொண்டாடப்படுகிறது

The Energy Resource Institute (TERI)

இந்த நிறுவனம் - புது டெல்லியில் உள்ளது
ICCG (international Centre for Climate Governance) - காலநிலை நிர்வாகத்திற்கான சர்வதேச மையம் - வெளியிட்ட அறிக்கை படி - TERI நிறுவனம் - உலக அளவில் பருவநிலை மாற்ற  ஆராய்ச்சியில் - 2வது இடம் பிடித்துள்ளது

Give-It-Up Campaign

இந்தியன் ரயில்வே நிறுவனம், Give-It-Up Campaign தொடங்கி உள்ளது.
சிலிண்டர் மானியத்தை விட்டுக்கொடுக்கும் பிரச்சாரத்தில் பெரிய வெற்றி கிடைத்ததால், தற்போது ரயில்வே மரியாதையும் விட்டுக்கொடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
இதில் 50% மற்றும் 100% மானியத்தை விட்டுக்கொடுக்க இரண்டு நிலை நிர்ணயக்கப்பட்டுள்ளது  


JIGYASA - Student Scientist Connect Program

CSIR (Council of Scientific and Industrial Research) and Kendriya vidyalaya sangatham இணைந்து, JIGYASA என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
இது மாணவர் மற்றும் விஞ்ஞானியை இணைக்கும் திட்டம்
CSIR - 26 செப்டம்பர் 1942 ம் ஆண்டு தொடங்கப்பட்டது
இதன் தலைவர் - இந்தியா பிரதமர் ஆவர்
இது இந்தியாவின் மிக பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு அமைப்பு


New anti-hijacking law

இந்திய உள்நாட்டு விமான துறை அமைச்சர் - அசோக் கஜபதி ராஜு, புதிய விமான கடத்தல் எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்
இதன் கீழ், விமான கடத்தலில் ஈடுபட்டு உயிர் இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் மரண தண்டனையும், மற்ற குற்றங்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது


Trilateral Malabar Exercise

முத்தரப்பு மலபார் கடற்படை கூட்டுப்பயிற்சி - இந்தியா, US, மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையில் - சென்னையில் தொடங்கப்பட்டது


Global Cyber Security Index 2017

UN International Telecommunication Union (ITU) - வெளியிட அறிக்கை - உலக சைபர் பாதுகாப்பு குறியீடு 2017 ன் படி - இந்தியா சைபர் பாதுகாப்பில் - 193 நாடுகளில்  - ஒன்றுக்கு 0.683 பெற்று - 23வது இடத்தில உள்ளது
முதல் இடத்தில சிங்கப்பூர், 2. அமெரிக்கா, 3. மலேஷியாInternational
Germany

ஜெர்மனி நாடாளுமன்றம் - தற்போது ஓரின பாலியல் திருமணத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது


Theresa May

இங்கிலாந்தில் நடத்த, தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால், அங்கு “Vote On Confidence” (நம்பிக்கை தீர்மானம்) நடத்தப்பட்டது. அதில் தெரசா மே அவர்கள் - பெரும்பான்மையை நிற்பித்துள்ளார்
இவர் - Conservative Party யை சேர்ந்தவர். இதற்க்கு முன் 2 முறை பிரதமராக இருந்துள்ளார்

NASA asteroid Deflection Mission

NASA ஆராய்ச்சி நிறுவனம் - asteroid Deflection Mission என்னும் புதிய பணியை மேற்கொண்டுள்ளது
Asteroids - என்பது செவ்வாய் கிரத்திற்கும், வியாழன் குறத்திற்கும் இடையே உள்ள சிறு பாறைகளாகும். இவை அவ்வப்போது அதன் வலிதடங்களில்  இருந்து விலகி செல்லும்.
அப்போலோது அவை பூமியை தாக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இதன் மூலம், அந்த பாறையின் வழித்தடங்களை மாற்றம் செய்ய முடியும்

UN - Treaty

ஐக்கிய நாடுகள் அமைப்பு கூட்டத்தில் - சுமார் 122 நாடுகள் சேர்ந்து அணு ஆயுதத்தை அழிக்க தீர்மானம் ஒன்று கொண்டுவந்துள்ளது.
இதில் அணு ஆயுதம் உடைய நாடுகளான - இந்தியா, பாக்கிஸ்தான், US, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், வட கொரியா மற்றும் இஸ்ரேல்   - வாக்கு அளிக்கவில்லை

Asian Development Bank

1.      ஏசியன் வளர்ச்சி வங்கி தலைவர் - Takehiho Nakao அவர்கள் - 3 நாள் பயணமாக இந்தியா வந்தார்
2.     அவர் இந்திய  உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக $10 பில்லியன், உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
3.     ADB உருவாக்கப்பட்ட ஆண்டு - 1966
4.     தலைமையகம் - மணிலா, பிலிபைன்ஸ்


WHO

1.      WHO - உலக சுகாதார அமைப்பு - காங்கோ குடியரசு நாட்டில் - ebola (எபோலா) தாக்கம் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவித்துள்ளது
2.     Ebola வைரஸ், அதிகம் பாதிப்பு ஏற்படுத்திய நாடுகள் - Guinea (கினி), Sierra Leone (சியரா லியோனி) மற்றும் Liberia (லைபீரியா) நாடுகள் ஆகும்
3.     WHO - தொடங்கப்பட்ட ஆண்டு - 7 ஏப்ரல் 1948
4.     தலைமையகம் - ஜெனீவா, சுவிற்சர்லாந்து  

12வது G20 மாநாடு

1.      G20 மாநாடு - ஜெர்மனி ஹாம்பர்க் நகரில் - நடைபெற்று வருகிறது
2.     இந்த ஆண்டிற்கான தீம் -Shaping an Interconnected world
3.     மேலும் - இதில் வளர்ந்து வரும் நாடுகளில்  பெண் தொழில்முனைவோரை ஊக்கவிப்பதற்காக $1 billion  நிதி உதவி வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது
4.     இதில் பிரதமர் மோடி தீவிரவாதத்தை ஒழிக்க 10 அம்ச கோரிக்கை ஒன்றை வைத்தார்

BRICS

1.      9வது BRICS மாநாடு, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், xiamen, சீனா - நகரில் நடைபெற உள்ளது
2.     2016 ல் இந்தியாவில், கோவா நகரில்  நடைபெற்றது
3.     முதல் BRICS மாநாடு - ரஷ்யாவில், 2009 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் ரஷ்யா, சீனா, பிரேசில் மற்றும் இந்தியா பங்கேற்றது
4.     தென் ஆப்பிரிக்கா - 2ம் மாநாட்டில், பிரேசிலில்  இந்த அமைப்புடன் சேர்த்து.


Best Astrologer விருது  
T S வினீத் பத் கேரளா மாநிலத்தை சேர்ந்த இவருக்கு , ரஷ்யா இந்தியா இடையிலான பொருளாதார சந்திப்பு மமாநாட்டில் , உலகின் சிறந்த ஜோதிடர் என்று விருது வழங்கப்பட்டது


Schemes
e VIN app

e VIN app - Electronic Vaccine Intelligence network  - தடுப்பு ஊசி தொடர்பான கண்கபிணிப்பு செயலி (app) ஆகும். இது சுகாதார அமைச்சகம் மற்றும் UNDP (United Nation Development Program ) இணைந்து செயல்படுத்தி வருகிறது
இந்த செயலி க்கு - GSMA Asia Mobile Award வழங்கப்பட்டது.  UN Sustainable Goal அடைவதற்கு உதவும்வகையில் இருந்தமைக்கு இப்பரிசு வழங்கப்பட்டது
UNDP - 1965 ம் ஆண்டு நியூ யார்க் நகரில் தொடங்கப்பட்டது
SDGs - Sustainable Development Goals - மொத்தம் 17 இலக்குகளை கொண்டத்து. இவை - வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, பாலின சமத்துவம், சுத்தமா நீர் மற்றும் சுகாதாரம் போன்றவை  ஆகும்

Garib Nawaz Skill Development Program

மத்திய சிறுபான்மையினர் அமைச்சர் - முக்ஹதர் அப்பாஸ் நக்வி அவர்கள் - Garib Nawaz Skill Development திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்
இதன் கீழ், 100 மாவட்டங்களில், திறன் மேம்பட்டு மையம் அமைக்க பட்டு, சிறுபான்மை இலையைநர்களுக்கு திறன் மேம்பட்டு பயிற்சி வழங்கப்படும்
மேலும் Tahrik-e-Taleem - என்னும் மெகா கல்வி பிரச்சாரமும் துவக்கி வைக்க பட்டது
அரசியல் அமைப்பு ஷரத்து 30 ன் கீழ் - சிறுபான்மையினர், தங்களுக்கு என சிறப்பு கல்வி நிறுவனம், வைத்துக்கொள்ளலாம்


கழிவுநீர் பாசனம்

இந்தியா உலக அளவில் -கழிவுநீர் பாசன பயன்பாட்டில் 5வது இடத்தில உள்ளது.
சீனா, பாக்கிஸ்தான், மெக்ஸிகோ, ஈரான் முதல் நான்கு இடத்தில உளது
இதன் மூலம் விளைய வைக்கும் உனவுகளை உட்கொள்ளும்போது, அதிக உடல் நல பாதிப்பு ஏற்படும்


No Detention Policy

தற்போது நடு நிலை கல்வி வரையுள்ள , No Detention Policy (அனைவரும் தேர்ச்சி) முறை - Right To Education act 2010 ன் படி கடைபிடிக்கப்பட்டு வருகிறது
தற்போது, இடைநிலை கல்வி திறன் குறைந்துவரும் காரணத்தால் - மத்திய மனிதவள துறை அமைச்சகம் - இந்த கொள்கையை கைவிட முடிவு செய்துள்ளது
எனவே - அடுத்த கல்வி ஆண்டு 2018-19 முதல் - அனைவரும் கட்டாய தேர்ச்சி (6 முதல் 8 வகுப்பு வரை) உள்ள முறை கைவிடபட்டு - தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெறுவோரே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும்

E-education

1.      இந்திய ஜனாதிபதி - பிரணாப் முக்ஹெர்ஜீ அவர்கள், இந்தியாவில் E-Education (e-கல்வி) யை வளர்க்க நான்கு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்
2.     அது - ஸ்வயம்(swayam), Swayam Prabha (ஸ்வயம் பிரபா), Natioanal Academic Depository (தேசிய கல்வி களஞ்சியம்), Natioanal Digital Library (தேசிய டிஜிட்டல் நூலகம்) ஆகும்
3.     இதன் படி, 1000 சிறந்த கல்வி நிபுணர்கள், டிஜிட்டல் புத்தகங்களை தயார் செய்வர்
Other Detailed Issues
GST

1.      பொருட்கள் மற்றும் சேவை வரி - ஒரு மறைமுக வரி ஆகும்
2.     இது முன்னாள் இருந்த - கழலால் வரி, விற்பனை வரி போன்ற 7 மத்திய வரியையும், மதிப்பு கூட்ட பட்ட வரி, பொழுதுபோக்கு வரி போன்ற 9 மாநில அரசு விதிக்கும் வரிகளையும் மாற்றி - ஒரே வாரியாக கொண்டுவந்துள்ளது - இதன் மூலம் வரி விதிக்கும் முறை எளிமை ஆக்க பட்டுள்ளது, மேலும் இந்திய வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும்

வரி விதிக்கும் அதிகாரம்

1.      இந்த GST ல் - வரி விதிக்க மற்றும் வரி சதவீதத்தை நிர்ணயிக்க - GST கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது
2.     இதில் மத்திய மாநில அரசுகள் இடம் பெரும்
3.     மேலும் இதில் மத்திய அரசுக்கு - சதவீத வாக்கு உரிமையும்
4.     மாநில அரசுக்கு - சதவீத வாக்கு உரிமையும் உண்டு
5.     மேலும்  - இந்த கூட்டமைப்பில் எந்த ஒரு வரி புதிதாக விதிக்கவோ, குறைக்கவோ - சதவீத வாக்குகள் கட்டாயம் இருக்க வேண்டும்
6.     எனவே இதில் மத்திய அரசு, பாதிக்கு  மேல் உள்ள மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் எப்பொழுதும் தன்னிச்சையாக வரி ஏற்றவோ குறைக்கவோ முடியாது
7.      GST கூட்டமைப்பின் தலைவர் - மத்திய நிதி அமைச்சர் ஆவர்

GST காலவரிசை

1.      முதன் முதலில் - வாஜ்பாய் அரசு 2000 ம் ஆண்டு - அப்போதைய மேற்கு வங்காள நிதி அமைச்சர் - அசிம் தாஸ்குப்தா தலைமையின் கீழ் - GST பற்றி பரிந்துரைக்க குழு ஒன்று அமைக்க பட்டது
2.     மேலும் 2003 ம் ஆண்டு பொருளாதார வல்லுநர் விஜய் கேல்கர் குழுவிடம் வரி சீர்திருத்த நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும் படி ஆணையிடப்பட்டது
3.     2005 ம் ஆண்டு விஜய் கேல்கர் குழு, GST அமலுக்கு பரிந்துரைத்தது
4.     எனவே அப்போதைய மத்திய நிதி அமைச்சர் P. சிதம்பரம் GST மசோதாவை மக்கள் அவையில் தாக்கல் செய்தார். அது நிறைவேறவில்லை
5.     2015 ம் ஆண்டு மீண்டும் இது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு - 8 செப்டம்பர் 2016 ம் நாள் ஜனைத்தபதியிடம் ஒப்புதல் பெற்று சட்டமாக்க பட்டது
6.     இந்த வரி முறை - ஜூலை 1, 2017 ம் நாள் முதல் அமலுக்கு வந்தது

மற்ற குறிப்பு

1.      GST வரி முறை கீழ்  வரி விதிக்கப்படாதா பொருட்கள் - பெட்ரோலிய பொருட்கள் (பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், மற்றவை), மின்சாரம், மனிதர் நுகர்வுக்கான மது பொருட்கள்
2.     இன்னும் - நகராட்சிகள், பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் - வரி விதிக்கலாம்


Other
SBI - Paperless banking

1.      SBI - இப்பொழுது நேபாளில், முழு தானியங்கி டிஜிட்டல் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது

South Australian Open Squash Title

1.      இந்தியாவை சேர்ந்த ஹரீந்தர் பல் சந்து -  South Australian Open Squash Title தங்கம் வென்றுள்ளார்

Global Forgiveness Day

1.      உலக மன்னிப்பு நாள் - (Global Forgiveness Day ) - ஜூலை 7 அன்று அனுசரிக்கப்படுகிறது


No comments:

Post a Comment