Monday, 9 October 2017

TNPSC Current Affairs August 4th week

TNPSC Current affairs in Tamil


August 4th week CF
TamilNadu 
1.      துணை முதல்வராக பொறுப்பேற்றார் - ஓ.பன்னீர்செல்வம்
2.     அன்ன கழுத்து பூ, எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும்? 35 ஆண்டுக்கு ஒருமுறை. தற்பொழுது, கொடைக்கானலில் உள்ள, பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ளது

தென்பெண்ணை ஆறு (அ) பொண்ணை ஆறு 
1.      சமீபத்தில், இந்த ஆற்றில் வெள்ள பெருக்குப்பேற்பட்டது
2.     இந்த ஆறு, கர்நாடக மாநிலத்தில் உள்ள , நந்தி மலையில் தோன்றி, தமிழகத்தில் பாய்ந்து, வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது
3.     இந்த ஆற்றின் குறுக்கில், கிருஷ்ணகிரி அணை மற்றும் சாத்தனுர் அணை கட்டப்பட்டுள்ளது

அர்ஜுனா விருது பெற்ற தமிழக விளையாட்டு வீரர் 
1.      அமல்ராஜ் - டேபிள் டென்னிஸ் வீரர்
2.     ஆரோக்கிய ராஜிவ் - ஓட்ட பந்திய வீரர்
3.     மாரியப்பன் தங்கவேலு - பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் வீரர்

டெங்கு காய்ச்சல் 
1.      இது ஒரு வைரஸ் நோய்யாகும். Flavivirus - டெங்கு காய்ச்சலை உருவாக்குகிறது
2.     இதனை Ades ரக கொசுக்கள் பரப்புகின்றது (ades aegypti mosquito)

National 
1.      பிஸ்எல்வி சி-39 ராக்கெட் என்று விண்ணில் செலுத்தப்பட்டது? ஆகஸ்ட் 31. இதில் IRNSS 1H என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது
2.     Shekatkar Committee (ஷெகட்கர் குழு) - ராணுவ போர் திறனை அதிகரிக்கவும் மற்றும் ராணுவ செலவினங்களை மறுசீரமைக்கவும் அமைக்கப்பட்டது - இந்தியா சீனா போர் அபாய காரணத்தால், ராணுவ தயார்நிலையை உறுதிசெய்யும் வகையில்
3.     மத்திய புள்ளியில் அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை படி - அருணாச்சல பிரதேஷ் மற்றும் JK, பொருளாதார ரீதியில் மிக வேகமாக வளர்ந்துவரும் மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் 5 பெரிய பொருளாதார மாநிலமாக 1. மகாராஷ்டிரா 2. தமிழ்நாடு 3. குஜராத் 4. உத்தர பிரதேஷ் 5. கர்நாடக உள்ளது
4.     Ksheera Bhagya scheme (ஷீரா பாக்கிய திட்டம்) - கர்நாடக அரசு இதனை, அமேசான் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தவுள்ளது. இதன் முக்கிய நோக்கம் - பள்ளி குழந்தைகளுக்கு தினமும் 1 glass பால் வழங்குவது ஆகும், ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில்
5.     மத்திய உணவு துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில், புதிய உணவு பதப்படுத்தல் மையத்தை துவக்கி வைத்தார். இதில், சிறு வெங்காயம் பதப்படுத்தல் மற்றும் மதிப்பு கூடுதல் பனி செய்யப்படும். தமிழகத்தில் அதிக அளவு சிறு வெங்காயம் உற்பத்திசெய்யும் மாவட்டம் பெரம்பலூர் ஆகும்
6.     Gobindobhog rice (கோபிந்தோ போக் அரிசி), மேற்கு வங்காளத்தில், பூர்த்வான் மாவட்டத்தில் விளைவிக்கபடும் இந்த வகை அரிசிக்கு Geographical Indication tag (புவியியல் அடையாள குறிச்சொல்) வழங்கப்பட்டுள்ளது.
7.      தீபக் மிஸ்ரா, இந்தியாவின் 45 வது தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதற்க்கு முன் நீதிபதி JS க்ஹெகர் பதிவியில் இருந்தார்
8.     கப்பல்படை, INS வருணா போர் கப்பலை, கப்பல் படையில் இருந்து நீக்கியது (காலம் முடிந்தபிறகு). அதற்க்கு பதில், INS சாரதி கப்பல்படையில் சேர்க்கப்பட்டுள்ளது
9.     பிரதான் மந்திரி கிசான் SAMPADA (சம்பட) யோஜனா (திட்டம்) - PMKSY - இதன் நோக்கம் - விவசாயத்திற்கு உதவுதல், செயலாக்கத்தை நவீனமயமாக்கல், மற்றும் விவசாய கழிவுகளை குறைதல் ஆகும்

International 
1.      ஹார்வி புயல் (Harvey  Hurricane)எந்த நாட்டை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது? அமெரிக்கா, ஆகஸ்ட் 2017
2.     9வது பிரிக்ஸ் உச்சி மாநாடு எங்கு நடைபெறுகிறது? சீனா, ஜியாமென் நகரம்
3.     BRICS innovative competitiveness report 2017 (கண்டுபிடிப்பு போட்டித்திறன் அறிக்கை 2017) -இந்த அறிக்கை படி, சீனா முதல் இடத்தில உள்ளது. BRICS நாடுகளில் இந்தியா கடைசி இடத்தில உள்ளது. எனினும், இந்த அறிக்கைபடி இந்தியா BRICS நாடுகளில், கண்டுபிடிப்பு மற்றும் போட்டித்திறனில் 2025-30 குள் முதல் இடம் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது
4.     நேபால் பிரதமர் ஷேர் பகதூர் டியூபா அவர்கள் 5 நாள் பயணமாக இந்தியா வந்தார்

Science 
1.      மத்திய விளையாட்டு துறை - “Pharma Jan Samadhan” (பார்மா ஜன் சமாதான்) என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் நோக்கம், அணைத்து விளையாட்டு வீரர்களும், தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்

Important Days 
1.      தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29, இது தயான் சந்த், ஹாக்கி விளையாட்டு வீரர் நினைவாக அவரது பிறந்த நாள் அன்று கொண்டாடபடுகிறது. இவருக்கு அரசு 1956 ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது
2.     சர்வதேச அணு பரிசோதனை எதிர்ப்பு தினம் - ஆகஸ்ட் 29

Sports 
1.      23வது சர்வதேச பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி, ஸ்காட்லாந்தில் கிளாஸ்க்ளோவ் நகரில் நடைபெற்றது. இதில் ஜப்பானை சேர்ந்த Nozomi (நோஸ்ஓமி) என்பவர் தங்க பதக்கமும், இந்தியாவை சேர்ந்த PV சிந்து (வெள்ளி பதக்கம்), சைனா நேவால் (வெண்கல பதக்கமும்) பெற்றார்
2.     சர்வதேச அளவில், அதிக கால்பந்து கோல் அடித்தவர் அர்ஜென்டீனா வை சேர்ந்த  லியோனல் மெஸ்ஸி ஆவர். இவர் தனது 350 து கோலை அடித்துள்ளார். இரண்டாவது இடத்தில, போர்ச்சுகல் அணியை சேர்ந்த கிறிஸ்டினா ரொனால்டோ ஆவர்


No comments:

Post a Comment